பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92]

களிற்றியானை நிரை

௧௯௫/195


செங்கண் இரும்புலி குழுமுஞ் சாரல்
ரு) வாரல் வாழியர் ஐய நேரிறை

நெடுமென் பணைத்தோள் இவளும் யானும்
காவல் கண்ணினம் தினையே நாளை
மந்தியும் அறியா மரம்பயில் இறும்பின்
ஒண்செங் காந்தள் அவிழ்ந்த ஆங்கண்
க0 தண்பல் அருவித் தாழ்நீர் ஒருசிறை

உருமுச்சிவந் தெறிந்த உரனழி பாம்பின்
திருமணி விளக்கிற் பெறுகுவை
இருண்மென் கூந்தல் ஏமுறு துயிலே.

- மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்.

(சொ - ள்.) க-ரு. ஐய -, வாழியர் -, நெடுமலை அடுக்கம் கண்கெட மின்னி - உயர்ந்த மலையின் பக்கங்களில் கண்ணொளி கெட மின்னி, படு மழை பொழிந்த பால்நாள் கங்குல் - மிக்க மழை சொரிந்த பாதி யிரவாகிய இருளில், குஞ்சரம் நடுங்கத் தாக்கி - யானையை நடுங்கும்படி தாக்கி, கொடுவரி செங்கண் இரும்புலி குழுமும் சாரல் - வளைந்த கோடுகளையும் சிவந்த கண்ணினையுமுடைய பெரிய புலி முழங்கும் மலைச் சாரலிலே, வாரல் - நீ வாராதிருப்பா யாக;

ரு-எ. நேர் இறை நெடுமென் பணைத்தோள் இவளும் யானும் - மெல்லிய முன் கையினையும் நீண்ட மெல்லிய மூங்கிலை யொத்த தோளினை யுமுடைய இத் தலைவியும் யானும், காவல் கண்ணினம் தினை - தினைப்புனங் காத்தலைக் கருதியுள்ளேம் ;

எ-க௩. நாளை - நாளைப் பகற்கண், மந்தியும் அறியா மரம் பயில் இறும்பின் - மந்திகளும் ஏறி அறிய மாட்டாத மரங்கள் செறிந்த காட்டில், ஒண் செங்காந்தள் அவிழ்ந்த ஆங்கண் - ஒள்ளிய செங்காந்தள் மலர்ந்த அவ்விடத்தே, தண் பால் அருவி தாழ் நீர் ஒரு சிறை - பலவாய தண்ணிய அருவிகள் வீழும் சுனையின் ஒருபுறம், உருமு சிவந்து எறிந்த உரன் அழி பாம்பின் திருமணி விளக்கில் - இடி சினந்து தாக்கலின் வலியழிந்த பாம்பினது அழகிய தலைமணி யாகிய விளக்கிலே, இருள் மெல் கூந்தல் ஏம் உறு துயில் - தலைவியின் இருண்ட மெல்லிய கூந்தலகத்து இன்பம் உறும் துயிலை, பெறுகுவை - நீ அடைவாய்.

(முடிபு) ஐய! வாழியர்! மழை பொழிந்த பானாட்கங்குல் குஞ்சரம் தாக்கிப் புலி குழுமும் சாரல் வாரல்; இவளும் யானும் தினை காவல் கண்ணினம்; நாளை இறும்பில் காந்தள் அவிழ்ந்த ஆங்கண் தாழ் நீர் ஒரு சிறை பாம்பின் திரு மணி விளக்கில் கூந்தல் ஏம்உறு துயில் பெறுகுவை.

(வி- ரை.) நாளை காவல் கண்ணினம் எனலுமாம். கோடு வாழ் குரங்கு எனப்படுவதும், மரமேறுந் தொழிலிற் சிறந்ததுமாகிய மந்தியும் ஏறி அறியாத என மரத்தின் உயர்ச்சி கூறியவாறு.