பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94]

களிற்றியானை நிரை

௧௯௯/199


ஆள்வினைக்குத் தக்க பெண்மையான் அவள் ஆற்றியிருந்தாள் என்பதூஉம் கருதிய கருத்தினாற் காமக் குறிப்புப் பிறந்தமையின், அஃது ஆண்மையாயிற்று எனவும், 1'மறை வெளிப் படுதலும்' என்னுஞ் சூத்திரத்து, நலங் கேழாகம் .. . சென்மோ நெஞ்சே' என்பது மலிதல் எனவும் கூறுவர் பேரா.



94. முல்லை


[வினைமுற்றி மீளுந் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. தலைமகன் பாங்கற்குச் சொற்றதூஉமாம்.]



தேம்படு சிமயப் பாங்கர்ப் பம்பிய
குவையிலை முசுண்டை வெண்பூக் குழைய
2வானெனப் பூத்த பானாட் கங்குல்
மறித்துரூஉத் தொகுத்த பறிப்புற இடையன்
ரு) தண்கமழ் முல்லை தோன்றியொடு விரைஇ

வண்டுபடத் தொடுத்த நீர்வார் கண்ணியன்
ஐதுபடு கொள்ளி அங்கை காயக்
குறுநரி யுளம்புங் கூரிருள் நெடுவிளி
சிறுகட் பன்றிப் பெருநிரை கடிய
க0) முதைப்புனங் காவலர் நினைத்திருந் தூதும்
 
கருங்கோட் டோசையொ டொருங்குவந் திசைக்கும்
வன்புலக் காட்டுநாட் டதுவே அன்புகலந்
தார்வஞ் சிறந்த சாயல்
இரும்பல் கூந்தல் திருந்திழை யூரே.

-நன்பலூர்ச் சிறுமேதாவியார்.

(சொ - ள்.) கஉ--௪. அன்பு கலந்து ஆர்வம் சிறந்த - அன்பால் உள்ளம் கலந்து விருப்பம் மிக்க, சாயல் - மென்மைத் தன்மையையும், இரும்பல் கூந்தல் - கரிய பலவாகிய கூந்தலினையும் உடைய, திருந்து இழை - திருந்திய இழையினை யுடைய தலைவியினது, ஊர் - ஊரானது,

க-அ. தேம்படு சிமயப் பாங்கர்ப் பம்பிய குவை இலை முசுண்டை வெண்பூ - தேன் அடை பொருந்திய உச்சிமலையின் பக்கலிற் செறிந்த குவிந்த இலைகளையுடைய முசுண்டையின் வெள்ளிய பூக்கள், வான் எனக் குழையப் பூத்த பால் நாள் கங்குல் - வானமானது மீனைப் பூத்ததுபோலக் குழைந்திடப் பூத்த நடு இரவின் இருளிலே, மறித் துரூஉ தொகுத்த பறிப்புற இடையன் - ஆட்டுக் குட்டிகளைச் சேரத் தொகுத்து வைத்துள ஒலைப்பாயை முதுகிற் கொண்ட இடை யன், தண்கமழ் முல்லை தோன்றியொடு விரைஇ - தண்ணிய கமழும் முல்லைப் பூவினைத் தோன்றிப் பூவுடன் இணைத்து, வண்டுபடத்


1. தொல். செய். கஅஎ, (பாடம்) 2. வான்பூத் தன்ன.