பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௨௦௪௪/204

அகநானூறு

[பாட்டு


களத்து ஒழிய - தம்மொடு பொருத ஏனைச் சேரர் பாண்டியராய இருபெரு வேந்தர்களும் போர் செய்து களத்தினிடத்தே பட்டொழிய, ஒளிறு வாள் நல் அமர் கடந்த ஞான்றை - விளங்கும் வாளினாற் செய்யும் நல்ல போரினை வென்ற பொழுது, களிறு கவர் கம்பலை போல - அப் பகை வேந்தர்களது களிறுகளைக் கவர்ந்து கொண்ட காலை எழுந்த ஆரவாரம்போல, பலர் வாய்ப்பட்டு அலர் ஆகின்றது - பலர் வாயிலும் பொருந்தி யெழுந்து அலர் ஆகாநின்றது.

(முடிபு) ஊர! நீ ஓர் குறுமகள் கொண்டனை யென்ப. அது, சோழர் பருவூர்ப் பறந்தலையில் இருபெரு வேந்தரும் பொருது ஒழிய, வாளமர்க் கடந்த ஞான்றைக் களிறு கவர் கம்பலை போல அலர் ஆகின்றது.

(வி - ரை.) மண்டை , இக்காலத்து மொந்தை என வழங்கப் படுகின்றது. - நுடக்கல் - கழுவல். அந்நீரையுண்ட என வருவித்துரைக்க. நறவு கலந்த நீராதலின் உண்டு கலிப்பதாயிற்று. கூட்டு முதற்றெறிக்கும் என்றது வளமிகுதி கூறியவாறாம். தெறிக்கும் ஞெகிழும் என்னும் பெயரெச்சங்கள் இடப்பெயர் கொண்டன. பிரம்பின் நெடுங்கொடி என்க. கவர் கம்பலை, பெயரெச்சம் காரியப் பெயர் கொண்டது. கின்று இடைநிலை பிற்கால வழக்காகலின், அலராகின்று என்பது பாடமாதல் வேண்டும்; அன்றி, அது பகுதிப் பொருள் விகுதி எனலுமாம்.

(உ - றை.) நறவுண் மண்டை . . . காஞ்சி யூர' என்றது, பரத்தையர் சேரியைச் சூழ்ந்து திரியும் பாணன் காமஞ் சாலா இளமையோளாகிய பரத்தையைத் தலைமகனொடு கூட்டத் தலைமகன் அவளை முயங்கிய விடத்து அவள் களிப்புற்று, நீங்கிய வழி மெலிகின்றாள் என்றபடி. இதன் கண் பொய்கையைப் பரத்தையர் சேரியாகவும், முள்ளுடைப் பிரம்பின் கொடியை அதனைச் சூழ்ந்து திரியும் நெஞ்சு வலிய பாணனாகவும், ஆம்பல் இலையைக் காமஞ்சாலாக் குறுமகளாகவும், அதனைக் கொடி துடக்கியதனைப் பாணன் அவளைத் தலைமகனோடு கூட்டியதாகவும், வாடையைத் தலைமகனாகவும், அது தூக்குந்தோறும் அவ்விலை வீங்கித் தூக்காதவழி நெகிழ்ந்ததனை, தலைமகன் அவளை முயங்கியவழி அவள் களிப்புற்று, நீங்கியவழி மெலிந்த தன்மையாகவும் கொள்க. மற்றும், இதில் நறவுண் மண்டை . . . கூட்டு முதற் றெறிக்கும்' என்றது நறவு கலந்த இழிந்த நீரையுண்ட இறால் அச் செருக்கினால் கூட்டுமுதற் றெறித்தது போலப் பரத்தையரின் இழிந்த இன்பத்தை நுகர்ந்த தலைவனும் செருக்குற்றுத் தனக்குப் புறம்பாகிய வேறிடத்தே தங்கிக் கிடக்கின்ற தன்மையாகவுங் கொள்க.

(மே - ள்.) '1புல்லுதல் மயக்கும்' என்னுஞ் சூத்திரத்து, 'ஒண் டொடி யாயத் துள்ளுநீ நயந்து, கொண்டனை யென்ப வோர் குறுமகள்' எனக் காமஞ் சாலா இளமையோளைக் கூறிற்று என்றனர் நச்.

2'தெய்வ மஞ்சல்' என்னுஞ் சூத்திரத்து, 'களிறு கவர் கம்பலை போல, அலராகின்றது பலர் வாய்ப் பட்டே' என்பது புறஞ்சொல் மாணாக் கிளவிக்கு உதாரணமாகும் என்றனர் பேரா.


1. தொல், கற், க0. 2. தொல். மெய்ப். உ௪.