பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98]

களிற்றியானை நிரை

௨௦௭ /207


அம் மஞ்சு ஊர - புகையினை யொத்த அழகிய வெண் மேகங்கள் தவழ, நுகர் குயில் அகவும் குரல் கேட்போர்க்கு - (அவ்வின்பத்தை) நுகரும் குயில்கள் பாடும் குரலினைக் கேட்போருக்கு, கண்பனி நிறுத்தல் எளிதோ - கண்ணின் நீரை நிறுத்துதல் எளிதாகுங் கொல்?

(முடிபு) தோழி! அருஞ்சுரம் இறந்த கொடியோர்க்கு வியலூரன்ன நின் அலர்முலை யாகம் புலம்ப ஆழேல் என்றி; என்? வேனிலில் யாற்றின் அடை கரைப் பொங்கரில் மஞ்சு ஊரக் குயில் அகவும் குரல் கேட்போர்க்குக் கண் பனி நிறுத்தல் எளிதோ!

நிரை பகுத்துத் திற்றி கெண்டும் ஆடவர் போல, புலி கலையின் வலங் கடந்து துறந்த முடைக்கண் எருவையொடு பருந்து வந்திருக்கும் அருஞ்சுரம் என இயையும்.

(வி - ரை.) கள்ளியம் ... பொறிக்கலை : அம், அசைகள். வலம் - வென்றி, ஓடும் வென்றி. கடந்து என்பதன்பின் பற்றிக் கொன்று தின்ற என்பதனை விரித்துரைக்க. முடை - முடை நாற்ற முடைய தசைக்கு ஆகு பெயர். முடையிடத்தே எருவையொடு பருந்து வந்திருக்கும் என்க. இறும்பு - பகைவர் எயிற்புறத்துக் காடுமாம். மகளிர் - விறலியர். இவர் கையிலே சிறிய மூங்கிற் கோலையுடையராவ ரென்பது, 1'வெண் கடைச் சிறு கோல் அகவன் மகளிர்' என்பதனாலும் அறியப்படும். பாணர், கூத்தராகிய அகவுநரும் கையிற் கோலுடையரென்பது பிறாண்டு வருவனவற்றால் அறியப்படும். யாழ - அசை. என் - எவ்வாறு இயலும் என்றபடி. மருது - மருதொடு என மூன்றனுருபு விரித்துரைக்க. குயில் அகவும் குரல் - குயில் பேட்டினை அழைக்கும் குரல் என்றலுமாம். கேட்போர்க்கு எனத் தன்னைப் பிறர் போல் வைத்துக் கூறினாள். இனி, கேட்டு வாளாவிருக்கும் தலைவர் பொருட்டாக, என் கண் பனி நிறுத்தல் எளிதோ என்றுரைத்தலுமாம்.

(மே - ள்.) 2'நடுவு நிலைத்திணையே' என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுளை எடுத்துக் காட்டி, இதன்கண் இருவகை வேனிலும் பாலைக்கண் வந்தன என்றார் நச்.



98. குறிஞ்சி


(தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவா ளாய்ச் சொல்லியது. தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉமாம்.)


பனிவரை நிவந்த பயங்கெழு கவாஅன்
துனியில் கொள்கையொ டவர்நமக் குவந்த
இனிய உள்ளம் இன்னா வாக
முனிதக நிறுத்த நல்கல் எவ்வம்
ரு) சூருறை வெற்பன் மார்புறத் தணிதல்


1. குறுந். உ௬அ. 2, தொல். அகத் க.