பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௨௧௬/216

அகநானூறு

[பாட்டு

(முடிபு) தோழி! - இம்மை . . . பழமொழி' இன்று பொய்த்தன்று கொல்! பெருங்காட்டிலே, ஞாயிற்றின் உருப்பு அவிர்பு ஊர்தலின், சுழன்றுவரு கோடையால் முருங்கையின் பன்மலர் ஆலியின் உதிரும் பன்மலை யிறந்தோர்க்கு யாம் முனிநகு பண்பு செய்தன்றோ இலம்.

மழவர், மண்ணொடு சிறுகோல் வில்லொடு பற்றி, கொளீஇ, ஏகி, கவர்ந்த கொள்ளையர் இனந்தலை பெயர்க்கும் பெருங்காடு என்க.

(வி - ரை,) வாய்ப்பகை - வாயினின் றுண்டாம் பகை : இருமல் ; அவரது வரவை வெளிப்படுத்தலின் பகை என்றார். நுரை - வெண்ணெய். பறைய - கழல வென்றுமாம். கன்றுடைக் கொள்ளையர் - கன்றினை யுடைய ஆனின் கொள்ளையர் என்க. விசும்பிற்கு ஓடம் - விசும்பாகிய கடலின்கண் ஓடம் ; அளக்கலாகா விரிவு பற்றி விசும்பிற்குக் கடலும், அதனை ஊடறுத்துச் செல்லுதல் பற்றி ஞாயிற்றுக்கு ஓடமும் உவமையாயின. ஊரிய - ஊர்தலால். காட்டின் கண் மலர் உதிரும் மலை யென்க. காட்டினை யுடைய பன்மலை யென்றலுமாம். மலையிறந்தோர்க்கு முனிதகு பண்பு யாம் செய்திலம் : அங்ஙனமாகவும் அவர் வரைவினை நீட்டிக்கச் செய்து நம்மை வருத்துதலின் 'நன்று செய் மருங்கில் தீது இல்' என்னும் பழமொழி இன்று பொய்த்தது போலும் எனக் கிழத்தி கவன்று கூறினாளென்க. 'நன்று செய் மருங்கில்' என்றமையால் இவள் இயற்கைப் புணர்ச்சிக் காலத்துத் தலைவற்கு இன்பம் விளைத்தாளென்பது பெற்றாம். தோழி கூற்றாயினும் பொருளிதுவே.



102. குறிஞ்சி


[இரவுக்குறிக்கண் சிறைப்புறமாகத் தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது.]


உளைமான் துப்பின் ஓங்குதினைப் பெரும்புனத்துக்
கழுதிற் கானவன் பிழிமகிழ்ந்து வதிந்தென
உரைத்த சந்தின் ஊரல் இருங்கதுப் -
பைதுவரல் அசைவளி யாற்றக் கைபெயரா
ரு) ஒலியல் வார்மயிர் உளரினள் கொடிச்சி

பெருவரை மருங்கில் குறிஞ்சி பாடக்
குரலுங் கொள்ளாது நிலையினும் பெயராது
படாஅப் பைங்கண் பாடுபெற் றொய்யென
மறம்புகல் மழகளி றுறங்கும் நாடன்
க0 ஆர மார்பின் அரிஞிமி ரார்ப்பத்

தாரன் கண்ணியன் எஃகுடை வலத்தன்
காவலர் அறிதல் ஓம்பிப் பையென
வீழாக் கதவம் அசையினன் புகுதந்
துயங்குபடர் அகல முயங்கித் தோள்மணந்
கரு) தின்சொல் லளைஇப் பெயர்ந்தனன் தோழி