பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

களிற்றியானை நிரை

௨௧௭



இன்றெவன் கொல்லோ கண்டிகு மற்றவன்
நல்கா மையின் அம்ப லாகி
ஒருங்குவந் துவக்கும் பண்பின்
இருஞ்சூழ் ஓதி ஒண்ணுதல் பசப்பே.


- 1மதுரை இளம்பாலாசிரியன் சேந்தங்கூத்தன்.

(சொ - ள்.) கரு. தோழி -,

க-௯. உளைமான் துப்பின் - சிங்கம் போலும் வலியினனாய், தினைப் பெரும் புனத்து ஓங்கு கழுதில் - பெரிய தினைப்புனத்தில் ஓங்கிய பரணின் கண்ணே , கானவன் பிழி மகிழ்ந்து வதிந்தென - கானவன் கள்ளுண்டு களித்து இருந்தனனாக, உரைத்த சந்தின் ஊரல் இரும் கதுப்பு - பூசிய மயிர்ச் சாந்தினையுடைய பரந்த கரிய கூந்தலை, ஐதுவரல் அசைவளி ஆற்ற - மெல்லென அசைந்து வரும் காற்றுப் புகுந்து புலர்த்த, ஒலியல் வார் மயிர் கை பெயரா உளரினள் - தழைத்து நீண்ட அக் கூந்தலைத் தன் கையாற் பெயர்த்துக் கோதிக் கொண்டு, கொடிச்சி - அவன் மனைவி, பெருவரை மருங்கில் - அப் பெரிய வரையின் பக்கத்தே, குறிஞ்சி பாட - குறிஞ்சிப் பண்ணைப் பாடா நிற்க, குரலும் கொள்ளாது - தான் கொண்ட தினைக் கதிரினையும் உட்கொள்ளாது, நிலையினும் பெயராது - நின்ற நிலையினின்றும் அகலாது, படாஅப் பைங்கண் பாடுபெற்று - துயில் வரப்பெறாத அழகிய கண் துயில்வரப் பெற்று, மறம் புகல் மழ களிறு ஒய்யென உறங்கும் நாடன் - வீரத்தினை விரும்பிய இளைய களிறு விரைந்து தூங்கும் நாட்டை யுடையனாகிய நம் தலைவன்,

க0-ரு. ஆரம் மார்பின் அரி ஞிமிறு ஆர்ப்ப - சந்தனம் பூசிய தனது மார்பின் கண்ணே அழகிய வண்டுகள் ஒலிப்ப, தாரன் கண்ணியன் எஃகு உடை வலத்தன் - தாரனும் கண்ணியனும் வேல் பொருந்திய வலக்கையை யுடையவனுமாகி, காவலர் அறிதல் ஓம்பி- காவலாளர் அறிதலைப் பரிகரித்து, பையென வீழாக் கதவம் அசையினன் புகுதந்து - தாழ் வீழ்த்தாத கதவினருகே தங்கி மெல்லெனப் புகுந்து, உயங்கு படர் அகல முயங்கித் தோள் மணந்து - வருந்தும் துன்பம் நீங்க அணைத்துத் தோளினைக் கூடி, இன்சொல் அளைஇப் பெயர்ந்தனன் - இன் சொற்களைக் கலந்து பேசிச் சென்றனன் ; (அங்ஙனமாகவும் இப்பால்,)

க௬-௯. இன்று அவன் நல்காமையின் - அவன் இன்று ஒரு நாள் வந்து அருள் செய்யாமையின், ஒருங்கு வந்து அம்பல் ஆகி - ஒருங்கே வந்து அலர் ஆகுமாறு, உவக்கும் பண்பின் - மகிழ்ச்சியை விளைவிக்கும் இயல்பினை யுடைய, இருஞ் சூழ் ஓதி ஒண் நுதல் பசப்பு - கரிய கூந்தலாற் சூழப்பட்ட ஒள்ளிய நெற்றியின் பசப்பினை, எவன் கொல்லோ கண்டிகும் - நாம் கண்டது என்னையோ.

(முடிபு) தோழி! கானவன் பிழி மகிழ்ந்து வதிந்தென, கொடிச்சி குறிஞ்சி பாட, களிறு கண்பாடு பெற்று உறங்கும் நாடன், முயங்கித் தோள் மணந்து இன்


(பாடம்) 1. மதுரைப் பாலாசிரியன்.