பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104]

களிற்றியானை நிரை

௨௨௧


நீண்ட தேரில், வாங்கு சினை பொலிய ஏறி - வளைந்த கொடிஞ்சி பொலிய ஏறி,

எ-க௩. புதல பூ கொடி அவரைப் பொய் அதள் அன்ன - புதல்களிற் படர்ந்த பூவையுடைய அவரைக் கொடியிலுள்ள பொய்த் தோல்போன்ற, உள் இல் வயிற்ற - உள்ளீடில்லாத வயிற்றினவும், மாழ்கி யன்ன தாழ்பெரும் செவிய - மயங்கிக் கிடந்தாலொத்த தாழ்ந்து தொங்கும் பெரிய செவியினவும் ஆகிய, வெள்ளை வெண் மறி - வெள்ளாட்டின் வெள்ளிய குட்டி, புன் தலைச் சிறாரோடு உகளி - புற்கென்ற தலையினை யுடைய சிறுவர்களொடு குதித்துச் சென்று, மன்றுழைக் கவை இலை ஆரின் அம் குழை கறிக்கும் - மன்றின் கண்ணே கவையாய இலையினை யுடைய ஆத்தியின் அழகிய தளிரைக் கடிக்கும், சிறு ஊர் பல பிறக்கு ஒழிய - சிறிய ஊர்கள் பல பின்னே ஒழிந்திட வந்து,

க௩-எ. மாலை - இம் மாலைக் காலத்தே, பனிவார் கண்ணள் பல புலந்து உறையும் - நீர் வடியும் கண்ணினளாய்ப் பலவற்றையும் எண்ணி வெறுத்து உறையாநிற்கும், ஆய் தொடி அரிவை - ஆராய்ந்த வளை யலையுடைய தலைவி, அணிய - அணிந்து கொள்ளுமாறு, குரல் கூந்தல் - அவளுடைய கொத்தாகிய கூந்தலில், போது வேய்தந்தோய். மலரைச் சூட்டினை (ஆகவே), இனிது செய்தனை - இனிய தொன்றைச் செய்தனை யாவாய், வாழிய - நீ வாழ்வாயாக.

(முடிபு) எந்தை! வேந்து வினை முடித்த காலை, கடும்பரி நெடுந்தேர் ஏறி, சீறூர் பல பிறக்கு ஒழிய (வந்து,) மாலை, புலத்து உறையும் அரிவை அணிய கூந்தல் போது வேய்தந்தோய், அதனால், இனிது செய்தனை, வாழிய!

(வி - ரை.) தேம் - திசை. 1'அவன் மறை தேஎம் நோக்கி' என்பது காண்க ; தேனுமாம். வள்பு - வார், கடிவாளம். முள் - தாற்று முள். ஆதி - குதிரையின் நேரோட்டம். நால்கு - நான்கு : பெயர்த் திரிசொல்லென்பர் நச்சினார்க்கினியர்; 2'பால்புரை புரவி நால்குடன் பூட்டி' என்பதன் உரை காண்க. சினை - தேரின் உறுப்பாகிய கொடிஞ்சி. பொய் அதள் - உள்ளீடின்றித் தோல் மாத்திரமாயிருக்கும் காய். தலைவனை எந்தையென்று கூறுவது, 'அன்னை யென்னை யென்றலு முளவே' என்னுஞ் சூத்திரத்து உம்மையால் தழுவப்படும். மறி, சிறாரோடுகளிக் குழை கறிக்கும் சீறூர் பல பிறக்கொழிய என்றது, கார்ப் பருவத்தில், தலைவன் மீண்டுவரும் வழியானது, அவனுக்கு இன்பத்தை விளைத்து, தலைவிபால் விரைந்தேகத் தூண்டியதைக் குறித்தவாறு.

(மே - ள்.) 3'வெறியறி சிறப்பின்' என்னுஞ் சூத்திரத்து, வஞ்சிக் கண்ணும் பொதுவியல் வருவன உள என்று கூறி, அது 'வேந்து வினை முடித்த' என்னும் அகப்பாட்டினுள், சுட்டி ஒருவர் பெயர் கூறா வஞ்சி பொதுவியலாய் வந்தவாறு காண்க, என்றும், 4'வினைவயிற் பிரிந்தோன்'


1. அகம். ௪அ. 2. பொருந். க௬௫. 3. தொல். புறத். ௫. 4. தொல். கற்பு. ௫௩.