பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106]

களிற்றியானை நிரை

௨௨௩/223


௯-கஎ. பந்து புடைப்பன்ன பாணிப் பல்லடி - பந்து புடைக் கப்பட்டு எழுவதொத்த தாளத்துடன் கூடிய பல அடியீட்டினையும், சில் பரி - சிலவகைச் செலவினையுமுடைய, குதிரை. குதிரைகளையும், பல்வேல் - பல வேற்படையினையுமுடைய, கெடலரும் துப்பின் எழினி - கெடுதலில்லாத வலி பொருந்திய எழினி யென்பான், விடு தொழில் முடிமார் - ஏவிவிட்ட தொழிலை முடிக்கும்பொருட்டு, கனை எரி நடந்த கல்காய் கானத்து - மிக்க எரி பரத்தலின் பாறைகள் காய்ந்திருக்கும் காட்டின் கண், வினை வல் அம்பின் விழுத்தொல் மறவர் - போர்த் திறம் வாய்ந்த அம்பினது தப்பாத தொடுத்தலையுடைய வீரர்கள், தேம்பிழி நறுங் கள் மகிழின் - பிழிந்த தேனாற் சமைந்த நறிய கள்ளுண்ட மகிழ்ச்சியினால், முனை கடந்து - பகைவர் போர் முனையை வென்று, வீங்கு மென் சுரைய ஏறு இனம் தக -பருத்த மெல்லிய மடியினையுடையவும் ஏறுகளோடு கூடியவுமாகிய ஆனினத்தைக் கொணர்ந்து தரும், பகை தலை மணந்த - பகைவருடன் பொருதல் கூடிய, பல் அதர் - பலவாகிய நெறிகளில், முகை தலை திறந்த வேனில் - மலை முழைஞ்சுகள் வெடித்தற்கேதுவாகிய வேனிற் காலத்தே, செலவு - செல்லுதலை,

௪. யாங்கு வல்லுநள் கொல் - எங்ஙனம் வல்லள் ஆயினளோ.

(முடிபு) ஈனாத்தாயர் தீம்பால் தேம் பெய்து மடுப்பவும் உண்ணாள், எம் முடைச் செல்வமும் உள்ளாள், வரை நாடன் தற் பாராட்ட, பொய் மருண்டு, பகைதலை மணந்த பல்லதரில், வேனிலில் செலவு யாங்கு வல்லுநள் கொல்.

எழினி விடு தொழில் முடிமார் மறவர், முனை கடந்து ஏற்றினம் தரூஉம் பகை தலை மணந்த பல்லதர் என்க.

(வி - ரை.) மெல்லென என்றதனைச் செலவு என்பதனோடு இயைத்து உரைத்தலுமாம். நற்றாயின் வேறு படுக்கச் செவிலியை, ஈனாத் தாயர் என்றார். சில்பரி - ஆதி, மண்டிலம் முதலிய செலவு வகை. விடுதொழில் - ஏவிய தொழில் ; பகைவர் ஆனினத்தைக் கவர்ந்து வரும் தொழில் ; பகைவர் கவர்ந்த தனது நிரையை மீட்கும் தொழிலுமாம். கள் மகிழின் - கள்ளை யுண்டு மகிழ்ந்தால் என்றுமாம். வேற்று இனம் எனப் பிரித்து, பகைப் புலத்து இனம் என்றலுமாம். முகை - மலை முழைஞ்சு. ஏற்றினம் தரூஉம் அதர், பகை தலை மணந்த அதர் எனத் தனித்தனி கூட்டுக.



106. மருதம்


(தலைமகள் தன்னைப் புறங்கூறினாளாகக் கேட்ட பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.)

எரியகைந் தன்ன தாமரைப் பழனத்துப்
பொரியகைந் தன்ன பொங்குபல சிறுமீன்
வெறிகொள் பாசடை யுணீஇயர் பைப்பயப்
பறைதபு முதுசிரல் அசைபுவந் திருக்குந்