பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113]

களிற்றியானை நிரை

௨௩௯(239)


எறிபடை கழீஇய சேயரிச் சின்னீர்
உ0) அறுதுறை யயிர்மணல் படுகரைப் போகிச்

சேயர் என்றலில் சிறுமை யுற்றவென்
கையறு நெஞ்சத் தெவ்வம் நீங்க
அழாஅம் உறைதலும் உரியம் பராரை
அலங்கல் அஞ்சினைக் குடம்பை புல்லெனப்
உரு) புலம்பெயர் மருங்கில் புள்ளெழுந் தாங்கு

மெய்யிவ ணெழியப் போகிஅவர்
செய்வினை மருங்கில் செலீஇயரென் உயிரே.

- கல்லாடனார்.

(சொ - ள்.) க--ரு. நன்று அல் காலையும் நட்பில் கோடார் - (நட்டார் ஆக்கமின்றிக்) கேடுற்ற காலையும் நட்புத் தன்மையிற் றிரியாராய், சென்று வழிப்படூஉம் திரிபு இல் சூழ்ச்சியில் - அந் நட்டார்பாற் சென்று அவர் குறிப்பிற் படும் மாறுபாடில்லாத அறிவுடைமையால், அகவுநர் பெருமகன் - கூத்தரைப் புரக்கும் தலைவனாய், புன் தலை மடப்பிடி அமர் வீசு வண் மகிழ் - (அவர்கட்குப்) புல்லிய தலையினையுடைய இளைய பிடியினை அமரின்கண் அளிக்கும் வண்மையாலாகிய மகிழ்வுடைய, அஃதை போற்றி - அஃதை என்பானைப் பாதுகாத்து, காப்புக்கை நிறுத்த - அவனைக் காவல் மிக்க இடத்தே நிலை நிறுத்திய, பல் வேல் கோசர் - பல வேற்படையினையுடைய கோசரென்பவரது,

௬-எ. இளங்கள் கமழும் நெய்தலஞ் செறுவின் - புதிய கள் கமழும் நெய்தலஞ் செறு எனும், வளம் கெழு நல் நாடு அன்ன - வளம் பொருந்திய நல்ல நாட்டை யொத்த,

எ-௯. என் தோள் மணந்து - என் தோளினைக் கூடி, அழுங்கல் மூதூர் அலர் எடுத்து அரற்ற - ஆரவாரமுடைய பழைய ஊர் அலரினை மிகுத்துக் கூற, நல்காது துறந்த காதலர் - அருளாது விட்டேகிய நம் காதலர்,

௯-கக. என்றும் கல் பொரூஉ மெலியாப் பாடு இன் நோன் அடியன் - எஞ்ஞான்றும் கல்லைப் பொருது மெலிவுறாத ஓசை இனிய வலிய அடியினை யுடையவனும், அல்கு வன் சுரை பெய்த வல்சியன் - மிக்க வலிய மூங்கிற் குழாயிற் பெய்த உணவினை யுடையவனும்,

கஉ--எ. இகந்தனவாயினும் - தன் நாட்டெல்லையைக் கடந்து சேய்மைக்கண்ண வாயினும், இடம் பார்த்து - கவரும் செவ்வி பார்த்து, பகைவர் ஒம்பினர் உறையும் கூழ்கெழு குறும்பில் - பகைவர் ஆவினைப் பாதுகாத்து உறையும் உணவு மிக்க அரண்களிற் சென்று, குவை இமில் விடைய வேற்று ஆ ஒய்யும் - திரண்ட இமிலையுடைய விடைகளுடன் கூடிய பகைப்புலத்து ஆக்களைக் கவர்ந்து செலுத்தும், கனை இரும் சுருணை கனி காழ் நெடுவேல் - செறிந்த கரிய பூணையும் நெய் கனிந்த தண்டையுமுடைய நீண்ட வேலினையும், விழவு அயர்ந்தன்ன கொழும் பல் திற்றி - விழாச்