பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௨௪௦(240)

அகநானூறு

[பாட்டு


செய்தாலொத்த கொழுமையாகிய பல உணவுகளையுமுடைய, எழாஅப் பாணன் நன்னாட்டு உம்பர் - பகைவர்க்குப் புறக்கிடாத பாணன் என்பானது நல்ல நாட்டிற்கு அப்பாற்பட்ட,

கஅ-உஉ. நெறிசெல் வம்பலர்க் கொன்ற தெவ்வர் - வழியிற் போகும் புதியர்களைக் கொன்ற ஆறலைப்போர், எறி படை கழீஇய சேய் அரிச் சில் நீர் - தாங்கள் எறிந்த படைக்கலத்தைக் கழுவிய சிவந்த நிறமுடைய அரித்தோடும் சின்னீரையுடைய, அறு துறை அயிர் மணல் படுகரை போகி - மக்கள் இயக்கம் அற்ற துறையாகிய நுண்மணல் பொருந்திய கரையினைத் தாண்டி, சேயர் என்றலின் - சேய்மைக்கண் உள்ளார் என்று பலரும் கூறலின், சிறுமையுற்ற என் கையறு நெஞ்சத்து எவ்வம் நீங்க - நோயுற்ற என் செயலற்ற நெஞ்சத்துத் துன்பம் ஒழிய,

உ௩-எ. பரு அரை அலங்கல் அம் சினைக் குடம்பை புல் என - பருத்த அரையிற் கிளைத்த அசையும் அழகிய கிளையிலுள்ள தன் கூடு பொலிவற்றொழிய, புலம் பெயர் மருங்கில் புள் எழுந்தாங்கு - தான் பெயர்ந்து போக எண்ணிய புலத்திடத்துப் பறவை புறப்பட்டுச் சென்றாற் போல, மெய் இவண் ஒழிய - எனது மெய் இங்குத் தனித்தொழிய, என் உயிர் போகி - என் உயிர் பிரிந்து புறப்பட்டு, அவர் செய்வினை மருங்கில் செலீஇயர் - அவர் வினை செய்யுமிடத்திற் செல்வதாக, அழாஅம் உறைதலும் உரியம் - அதனானே நாம் அழாதேமாய் உறைதற்கு உரியம் ஆவேம்.

(முடிபு) தோழி! கோசர் நன்னாடன்ன என் தோள் மணந்து துறந்த காத லர் பாணன் நன்னாட்டும்பர், படுகரை போகிச் சேயரென்றலின் எவ்வம் நீங்க என் உயிர் போகி அவர் வினைசெய் மருங்கிற் செலீஇயர்; அழாஅம் உறைதலும் உரியம்.

அடியனும் வல்சியனுமாகிய வேற்றா ஒய்யும் பாணன் என்க.

(வி - ரை.) கூத்தர் முதலாயினார்க்கு யானை முதலியவற்றை அமர்க்களத்தில் அளித்தலை, 1'மாற்றார், உறுமுரண் சிதைத்தநின் னோன்றாள் வாழ்த்திக், காண்கு வந்திசிற் கழறொடி யண்ணல், . . . மழையினும் பெரும்பயம் பொழிதி யதனால், பசியுடை. யொக்கலை யொரீ இய, இசைமேத் தோன்றனின் பாசறை யானே' என்பதனால் அறிக. மாவீசு என்பது பாடமாயின், பிடியொடு களிற்றினை வழங்கும் என்க. நெய்தலஞ் செறுவாகிய நன்னாடென்க. இன் சாரியை அல்வழிக்கண் வந்தது. பாடு இன்நோன் அடியன் - ஓசை இனிய வலிய அடியை யுடையவன்; செருப்பணிந்து பரலில் நடத்தலின் ஓசை இனிய என்றார், பரட்டினோனடி என்ற பாடத்திற்குப் பரட்டினையுடைய வலிய அடி யென்க. விடைய வேற்றா - வேற்றுப் புலத்து விடைகளோடு கூடிய ஆக்கள். அடியன் வல்சியன் ஆகிய பாணன் எனவும், வேற்றா ஒய்யும் பாணன் எனவும், வேலையும் திற்றியையும் உடைய பாணன் எனவும் தனித்தனி கூட்டுக. ' வலிமிகு மொய்ம்பிற் பாணன்' எனவும், ' வடாஅது வல்வேற் பாணன் நன்னாடு' எனவும் இந்நூலுட் பிறாண்டும் வருதலிற் பாணனென்பான்


1. பதிற்று . ௬௪ .