பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/245

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௨௪௨(242)

அகநானூறு

[பாட்டு


நோக்கிக்கூறி, நம் புலந்து உறையும் எவ்வம் நீங்க - நம்மை வெறுத்து உறையும் துன்பம் நீங்குமாறு,

அ-கரு. நெடுங்கொடி நுடங்கும் வான்தோய் புரிசை - நெடிய கொடி அசையும் வானைத்தோயும் மதிலின்கண், யாமம் கொள்பவர் நாட்டிய நளிசுடர் - இராப்பொழுதைக் காத்திருப்போர் ஏற்றிய நெருங்கிய விளக்குக்கள், வான் அக மீனின் விளங்கித் தோன்றும் - வானிடத்தேயுள்ள மீன் போல விளக்கமுற்று காணப்பெறும், அரு கடி காப்பின் - அணுகுதற்கரிய மிக்க காவலினை யுடைய, அஞ்சுவரும் மூதூர் - பகைவர்க்கு அச்சத்தினைத்தரும் முதிய ஊரிலுள்ள, திருநகர் அடங்கிய - செல்வமுள்ள மனையில் தங்கிய, மாசு இல் கற்பின் - குற்றமற்ற கற்பினையும், அரி மதர் மழைக்கண் - செவ்வரி படர்ந்த மதர்த்த குளிர்ந்த கண்களையும், அமை புரை பணைத்தோள் - மூங்கிலை ஒத்த பருத்த தோளினையும் உடைய, அணங்குசால் அரிவையைக் காண்குவம் - தெய்வம்போற் சிறந்த நம் தலைவியைக் காண்போம் ;

க௬. பொலம்படைக் கலி மா பூண்ட தேர் - பொன்னாலாய சேணத்தினை யணிந்த செருக்கினை யுடைய குதிரைகள் பூட்டப்பெற்ற தேரினை,

அ. உவக்காண் கடவுமதி - உங்கே செலுத்துவாயாக.

(முடிபு) வலவ! நம் தலைவி தோழியை நோக்கி, ' சிறுபுன் மாலையும் உள்ளார் அவர்' எனக் கூறிப் புலந்து உறையும் எவ்வம் நீங்க, மூதூரில் திருநகர் அடங்கிய அரிவையைக் காண்குவம்; உவக்காண் தேர் கடவுமதி.

புரிசையில் நாட்டிய நளிசுடர் வானக மீனின் விளங்கித் தோன்றும் மூதூர் என்க .

(வி - ரை.) எல்ல - எல்லா; கெழுதகைப்பொதுச் சொல். கல் - அத்த மலை. கதிர் வெம்மை மழுங்கினமையால் மதிபோல் என்றார். சிறிது சிறிதாக மறைதல் குறித்து அரவு நுங்கு மதி என்றார். ஐயென - வியக்கும் பரிசு என்றுமாம். புன் மாலை - வருத்தத்தைச் செய்யும் மாலையுமாம். நம் புலந்து என்பது விகாரமாயிற்று. நூல் - குதிரையுளமறியும் நூல். உவக்காண் - ஊங்கே; மூதூர்க்கண் என்றபடி. கடிக்காப்பு - ஒருபொருட் பன்மொழி. அடங்கிய கற்பின் எனக்கொண்டு, ஆறிய கற்பினையுடைய என்றுரைத்தலுமாம். அணங்கு சால் - அருந்ததிபோலும் கற்புடைய என் றலுமாம்.115. பாலை


(பிரிவிடை வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.)


அழியா விழவின் அஞ்சுவரு மூதூர்ப்
பழியிலர் ஆயினும் பலர்புறங் கூறும்
அம்பல் ஒழுக்கமும் ஆகிய வெஞ்சொற்