பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௨௫௨(252)

அகநானூறு

[பாட்டு


தணிவிக்கச் செல்லும் போர்க்களத்திற்கு, தம்மொடு துணைப்ப - நாமும் தம்மொடு துணையாகிச் செல்ல, துணிகுவர் கொல்லோ - துணிவரோ.

(முடிபு) தோழி! நம் தலைவர் வரைவு நன்றென்னாது அகலினும், வருந்துவள் இவள் எனத் திருந்துபு நோக்கி, மலைமுதல் ஆறு ஆய சுரன் வழக்கற்ற தென்னாது, உரஞ் சிறந்து அமர் அழுவம் தம்மொடு துணையாகக் கொண்டு செல்லத் துணிகுவர் கொல்லோ.

பிரண்டை திரங்கும் அத்தத்தில் அடுப்பில் மழவர் ஊன் புழுக்கயரும் சுரன் என்க .

(வி - ரை.) வறிது திரங்கும் எனவும், வெறிகொள ஊன் புழுக் கயரும் எனவும் கூட்டுக. ஏறு - இடி யேறு எனவும், எறிதல் எனவும் இரட்டுற மொழிதலாகக் கொள்க. சாத்து - வணிகர் திரள். துனிகொள என்னும் பாடத்திற்கு வெறுப்புண்டாக என்றுரைக்க.

(உ - றை.) 'ஆறு செல்லும் மாக்களால் அறுத்துப் போகடப்பட்டுப் பிரண்டை வறிதே திரங்குவதுபோலத் தலைவராற் றுறக்கப்பட்டு எம் அழகு பயன்படலின்றியே கழியா நின்றது' 'சாத்தராற் றுறக்கப்பட்ட கல்லடுப்பு மழவர்க்கு ஊன் புழுக்கயர்ந்து மகிழ்தற்குக் கருவியானாற் போலத் தலைவராற் றுறக்கப்பட்ட யாம் அம்பற் பெண்டிர்க்கு அலர்தூற்றி மகிழற்கு இலக்காயினோம்'

'புலியொடுழந்து சென்னியிடத்து வடுப்பட்டு வருந்திய யானை நீருண்ணச் சுனையிடத்து முழ மூன்றிக் கையைத் தோய்த்தும் நீர் பெறாதுயிர்த்தாற் போல், அன்னையின் கொடுஞ் சொல்லாலும் அம்பற் பெண்டிரின் அலராலும் நெஞ்சு புண்ணுற்ற யாம், அந் நோய் தீர வரையுமாறு தலை மகன் கழல்களைப் பணிந்து வேண்டியும் அருள் பெறாமல் உயிர்க்கின்றோம்' என்றாளாம். (இராஜகோபாலையங்கார்)



120. நெய்தல்


[தோழி பகற்குறிக்கண் தலைமகளை இடத்துய்த்து வந்து தலைமகனை எதிர்ப்பட்டு நின்று சொல்லியது.]


நெடுவேள் மார்பின் ஆரம் போலச்
செவ்வாய் வானந் தீண்டிமீன் அருந்தும்
பைங்காற் 1கொக்கின நிரைபறை யுகப்ப
எல்லை பைப்பயக் கழிப்பிக் குடவயின்
ரு) கல்சேர்ந் தன்றே பல்கதிர் ஞாயிறு

மதரெழில் மழைக்கண் கலுழ இவளே
பெருநாண் அணிந்த சிறுமென் சாயல்
மாணலம் சிதைய ஏங்கி யானாது
அழல்தொடங் கினளே பெரும அதனால்


(பாடம்) 1. கொக்கின் நிரை,