உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120]

களிற்றியானை நிரை

௨௫௩(253)




க0) கழிச்சுறா எறிந்த புட்டாள் அத்திரி

நெடுநீர் இருங்கழிப் பரிமெலிந் தசைஇ
வல்வில் இளையரொ டெல்லிச் செல்லாது
சேர்ந்தனை செலினே சிதைகுவ துண்டோ
பெண்ணை ஓங்கிய வெண்மணற் படப்பை
கரு) அன்றில் அகவும் ஆங்கண்

சிறுகுரல் நெய்தலெம் பெருங்கழி நாட்டே.


--நக்கீரனார்.


(சொ - ள்.) க-ரு. நெடுவேள் மார்பின் ஆரம் போல - முருகக் கடவுள் மார்பினிடத்து முத்தாரம்போல, செவ்வாய் வானம் தீண்டி- செவ்வானத்திடம் பொருந்தி, மீன் அருந்தும் பைங்கால் கொக்கு இனம் நிரைபறை உகப்ப. மீனை அருந்தும் பசிய காலையுடைய கொக்கினது இனம் வரிசையாகப் பறத்தல் உயர்ந்திட, எல்லை பை பையக் கழிப்பி - பகற்பொழுதை மெல்ல மெல்லப் போக்கி, பல் கதிர் ஞாயிறு குடவயின் கல் சேர்ந்தன்று - பல கதிர்களையுடைய ஞாயிறு மேற்றிசையில் மறையும் மலையை அடைந்தது:

௬ -௯. இவளே பெரு நாண் அணிந்த சிறுமென் சாயல் - மிக்க நாணைக் கொண்ட சிறிய மெல்லிய சாயலினையுடைய இவள், மாண் நலம் சிதைய - மாண்புற்ற அழகு கெட, ஏங்கி - ஏக்கமுற்று, மதர் எழில் மழைக்கண் கலுழ - மதர்த்த அழகினையுடைய குளிர்ந்த கண் கலங்கிட, ஆனாது அழல் தொடங்கினளே - அமையாது அழுதலைத் தொடங்கியுள்ளாள் ;

௯--கஉ. பெரும - தலைவ! அதனால் - அதனாலும், கழிச் சுறா எறிந்த புண் தாள் அத்திரி - உப்பங்கழியிலுள்ள சுறாமீன் எறிதலாலுற்ற புண்ணுற்ற தாளினை யுடைய கோவேறு கழுதை, நெடு நீர் இருகழி பரி மெலிந்து - நீண்ட நீரினை யுடைய கரிய கழியில் செல்லுதல் மெலிந்திடலாலும், வல்வில் இளையரொடு எல்லிச் செல்லாது அசைஇ - வலிய வில்லினையுடைய நின் ஏவலரொடு இவ்விரவிற் செல்லாது இளைப்பாறி,

க௪-௬. பெண்ணை ஓங்கிய வெண்மணல் படப்பை - பனை மரங்கள் ஓங்கிய வெள்ளிய மணல் பரந்த தோட்டங்களில், அன்றில் அகவும் ஆங்கண் - அன்றில் தன் துணையை அழைக்கும் அவ்விடத்தே, சிறுகுரல் நெய்தல் எம் பெருங் கழி நாட்டு - சிறிய பூங்கொத்தினையுடைய நெய்தல் பொருந்திய எமது பெரிய கழி சூழ்ந்த நாட்டின் கண்,

க௩. சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ - நீ தங்கிச் செல்லின் கெடுவதொன்று உளதோ?

(முடிபு) பெரும! பல்கதிர் ஞாயிறு கல் சேர்ந்தன்று ; இவள் அழல் தொடங்கினள் ; அதனாலும், அத்திரி பரிமெலிந்திடலாலும் இளயரொடு எல்லிச் செல்லாது அசைஇ, எம் பெருங்கழி நாட்டுச் சேர்ந்தனை செலின், சிதைகுவது உண்டோ .