பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௩௬அகநானூறு[பாட்டு

 


அழனுதி யன்ன தோகை ஈன்ற
கழனி நெல்லின் கவைமுதல் அலங்கல்

௨௦)நிரம்பகன் செறுவில் வரம்பணையாத் துயல்வரப்
புலம்பொடு வந்த பொழுதுகொள் வாடை
இலங்குபூங் கரும்பி னேர்கழை இருந்த
வெண்குருகு நரல வீசும்
நுண்பல் துவலைய தண்பனி நாளே.

-பெருந்தலைச் சாத்தனார்.

(சொ - ள்.) ௧-௧௨. தன் கடல் பிறந்த முத்தின் ஆரமும் = தனது தென்கடலில் தோன்றிய முத்தாகிய ஆரமும், முனை திறை கொடுக்கும் துப்பின் = பகைவர் திறைகொடுக்கும் வலிமையையுடையதான, தன்மலைத் தெறல் அரும் மரபின் கடவுள் பேணி = தனது பொதியில்மலையில் உள்ள அடியார்களைத் துன்புறுத்தலில்லாத முருகவேளை வழிபட்டு, குறவர் தந்த சாந்தின் ஆரமும் = குறவர்கள் கொண்டு வந்து தரும் சந்தனமாகிய ஆரமும் ஆய, இருபேர் ஆரமும் = இவ்விரு பெரிய ஆரங்களையும், எழில்பெற அணியும் = அழகுற அணியும், திருவீழ் மார்பின் தென்னவன் மறவன் = இலக்குமி விரும்பும் மார்பினையுடைய பாண்டியனது படைத்தலைவனும், குழியிற் கொண்ட மராஅ யானை = பயம்பில் பிடித்த பழகாத யானைகளை, மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லது = உரிய மொழிகளால் தொழிலை அறிவிக்கும் சிறு பொழுதல்லது, வரை நிலை இன்றி = தனக்கெனச் சிறிதும் வரைந்து கொள்ளும் நிலைமை யின்றி, இரவலர்க்கு ஈயும் = இரவலர்களுக்கு வழங்கும், வள்வாய் அம்பின் கோடைப் பொருநன் = கூர்மை வாய்ந்த அம்பினையுடைய கோடைக்குத் தலைவனுமாகிய, பண்ணி தைஇய பயம்கெழு வேள்வியின் = பண்ணி என்பான் செய்த பயன்மிக்க களவேள்வியைப் போல, விழுமிது நிகழ்வதாயினும் = நீர் தேடிவரும் பொருளாற் சிறந்த பயன் நிகழுமாயினும்,

௧௭-௨௪. வளவயல் அழல்நுதி அன்ன = வளம் மிக்க வயலில் தீயின் கொழுந்தினை யொத்த, தோகை ஈன்ற = தோடிகளை ஈன்ற, கழனி நெல்லின் கவை முதல் அலங்கல் = வயல் நெல்லின் பலவாகக் கிளைத முதலிலிருந்து தோன்றிய நெற்கதிர், நிரம்பு அகன் செறுவில் = நிரம்பிய அகன்ற வயலினிடத்து, வரம்பு அணையாத் துயல்வர = வரப்புக்களை அணையாகக் கொண்டு கிடந்து அலைய, புலம்பொடு வந்த பொழுதுகொள் வாடை = தனிமைத் துன்பினைக் கொண்டுவரும் பனிக்காலத் தன்மை கொண்ட வாடைக் காற்று, இலங்கு பூங் கரும்பின் ஏர்கழை இருந்த = விளங்கும் பூக்களையுடைய கரும்பின் ஓங்கின தண்டின் மீதிருந்த, வெண்குருகு நரல வீசும் = வெண்ணாரை ஒலிக்கும்படி வீசுகின்ற, நுண்பல் துவலைய நண்பனி நாள் = நுண்ணிய பலவாகிய துளிகளைக் கொண்ட தண்ணிய பனிக்காலத்தே,

௧௨-௪. தெற்கு ஏர்பு கழி மழை பொழிந்த = (மேகங்கள்) தெற்கே எழுந்துபோய் மிக்க மழையைப் பொழியும், பொழுது