பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௪௦

அகநானூறு

பாட்டு

 


செறிந்த சேரிச் செம்மல் மூதூர்
அறிந்த மாக்கட் டாகுக தில்ல
தோழி மாரும் யானும் புலம்பர்

௧௦)சூழி யானைச் சுடர்ப்பூண் நன்னன்
பாழி அன்ன கடியுடை வியனகர்ச்
செறிந்த காப்பிகந் தவனொடு போகி
அத்த இருப்பை ஆர்கழல் புதுப்பூத்
துய்த்த வாய துகள்நிலம் பரக்கக்

௧௫)கொன்றை யஞ்சினைக் குழற்பழங் கொழுதி
வன்கை யெண்கின் வயநிரை பரக்கும்
இன்றுணைப் படர்ந்த கொள்கையொ டொராங்குக்
குன்ற வேயில் திரண்டஎன்
மென்றோள் அஞ்ஞை சென்ற ஆறே.

-மாமூலனார்.
 


(சொ - ள். ௯-௧௯.) தொழிமாரும் யானும் புலம்ப = தன் தோழிமாரும் யானும் தனிமையான் வருந்த, சூழி யானைச் சுடர்ப் பூண் நன்னன் பாழி அன்ன = முகபடாம் அணிந்த யானையினையும் ஒளிவிடும் அணியினையும் உடைய நன்னனது பாழி என்னும் பதியை ஒத்த, கடியுடை வியன் நகர் செறிந்த காப்பு இகந்து = காவல் மிக்க தந்தையது பெரிய மனையின் மிக்க காவலைத் தாண்டி, அவனொடு போகி = தலைவனொடு புறப்பட்டு, இன்துணைப் படர்ந்த கொள்கையொடு ஒராங்கு = தனது இனிய துணைவனை நினந்த கொள்கையால் ஒருங்குகூடி, குன்றவேயில் திரண்ட மெல்தோள் என் அஞ்ஞை சென்ற = குன்றத்து மூங்கில்போலத் திரண்ட மெல்லிய தோளையுடைய எனது அன்னை சென்றடைந்ததும், அத்தம் இருப்பை ஆர் கழல் புது பூ = அருஞ்சுரத்தில் உள்ள இருப்பை மரத்தின் ஆர்க்குக் கழன்ற புதிய பூக்களை, துய்த்த வாய = தின்ற வாயினவாய், துகள் நிலம் பரக்க = நிலத்திலே தூவிப் பரக்கச் சென்று, கொன்றை அம் சினை குழல் பழம் கொழுதி = கொன்றையினது அழகிய கிளைகளிலுள்ள குழல்போலும் பழத்தைக் கொழுதி, வன் கை எண்கி்ன வய நிரை பரக்கும் = வலியை கையினையுடைய கரடிகளின் வலிய கூட்டம் பரந்து செல்வதுமாய, ஆறு = நெறி,

௧-௮. எம் வெம் காமம் இயைவதாயின் = எமது மிக்க விருப்பம் கைகூடுவதாயின், மெய் மலி பெரும்பூண் செம்மல் கோசர் = மெய்ம்மொழியாற் சிறந்த பெரிய அணிகளையுடைய தலைமை கொண்ட கோசர்களது , குடுமி கொம்மை அம் பசுங்காய் விளைந்த பாகல் ஆர்கை = ஆர்க்கினை தலையிலுடைய திரண்ட பசிய காய் முற்றின பாகற்பழத்தைத் தின்னுதலுடைய, பறைக்கண் பீலித் தோகைக் காவின் = பறைபோல வட்டமான கண்களைக் கொண்ட தோகைகளையுடைய மயில்கள் மிக்க சோலைகளையுடைய, துளுநாட்டு அன்ன = துளுநாட்டை யொத்த, வறுங்கை வம்பலர் தாங்கும் பண்பின் = பொருளின்றி வரும் புதியவர்களைப் புரக்கும் நற்பண்பினையுடைய, செறிந்த