பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௪௭

அகநானூறு

[பாட்டு



 

(மே-ள்.) 1பொழுதும் ஆறும்' என்னும் சூத்திரத்து, 'அவனூறஞ்சல், என்றதற்கு, 'ஒரு நாள் விழுமமுறினும் வழிநாள், வாழ்குவ ளல்லள் என்றோழி' என்னும் பகுதியை எடுத்துக் காட்டினர் நச்.


 

19. பாலை

 

[நெஞ்சினாற் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன் தலைமகள் நலன் நயந்து உள்ளிய நெஞ்சினைக் கழறியது.]

 


அன்றவண் ஒழிந்தன்றும் இலையே வந்துநனி
வருந்தினை வாழியென் நெஞ்சே பருந்திருந்
துயாவிளி பயிற்றும் யாவுயர் நனந்தலை
உருள்துடி மகுளியின் பொருள்தெரிந் திசைக்குங்

ரு) கடுங்குரற் குடிஞைய நெடும்பெருங் குன்றம்
எம்மொ டிறத்தலும் செல்லாய் பின்னின்
றொழியச் சூழ்ந்தனை யாயின் தவிராது
செல்லினிச் சிறக்கநின் னுள்ளம் வல்லே,
மறவல் ஓம்புமதி எம்மே நறவின்

க0) சேயிதழ் அனைய வாகிக் குவளை
மாயிதழ் புரையும் மலிர்கொள் ஈரிமை
உள்ளகங் கனல உள்ளுதொ றுலறிப்
பழங்கண் கொண்ட 2கதழ்ந்துவீழ் அவிரறல்
வெய்ய உகுதர வெரீஇப் பையெனச்

கரு) சில்வளை சொரிந்த மெல்லிறை முன்கை
பூவீ கொடியிற் புல்லெனப் போகி
அடர்செய் ஆயகல் சுடர்துணை யாக
இயங்காது வதிந்தநங் காதலி
உயங்குசாய் சிறுபுறம் முயங்கிய பின்னே.

- பொருந்தில் இளங்கீரனார்.

 

(சொ - ள்.) க-உ. என் நெஞ்சே வாழி-, அன்று அவண் ஒழிந் தன்றும் இலை - நாம் புறப்படும் அன்று யான் வாரேன் என்று கூறி நம் மனையில் தங்கிவிட்டாயு மல்லை, வந்து நனி வருந்தினை - இத்துணை யும் வந்து மிகவும் வருத்தமுற்றாய்,

உ-சு. பருந்து இருந்து உயா விளி பயிற்றும் - பருந்து தங்கி வழிச்செல்வோர் வருத்தத்தை யடையும் ஓசையைப் பலகாலும் செய்யும், யா உயர் நனந்தலை - யாமரங்கள் உயர்ந்த அகன்ற இடங்களில், உருள் துடி மகுளியின் - (கடிப்பு) உருள்கின்ற இழுகு பறையின் ஓசையைப்போல, பொருள் தெரிந்து இசைக்கும் - பொருள் தெரிய ஒலிக்கும், கடுங்குரல் குடிஞைய - கடிய குரலையுடைய ஆந்தைகளை யுடைய, நெடும்பெருங் குன்றம் - நீண்ட பெரிய குன்றத்தை, எம்

 

1. தொல். பொருளி. கசு. (பாடம்) 2. கலிழ்ந்து.