பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

களிற்றியானை நிரை

௪௯


மொடு இறத்தலும் செல்லாய் - எம்மொடு தொடர்ந்து கடத்தலும் செய்யாய்,

சு-அ. பின் நின்று ஒழியச் சூழ்ந்தனை யாயின் - பின்னே நின்று ஒழியக் கருதினை யாயின், தவிராது செல் இனி வல்லே - தடையின்றி இப்பொழுதே விரைந்து செல்வாயாக, சிறக்க நின் உள்ளம் - நின் உள்ளத்தெண்ணம் சிறப்பதாக;

௯-௧௯. குவளை மா இதழ் புரையும் - முன் குவளையினது கரிய இதழை யொக்கும், மலிர்கொள் ஈர் இமை - நீர் மிகுதல் கொண்ட குளிர்ந்த கண்களின் இமை, நறவின் சேய் இதழ் அனையவாகி - பின்பு நறவம் பூவின் சிவந்த இதழ் அனையவாகி, உள்ளகம் கனல - உள்ளம் கொதித்தலாலே, உள்ளுதோறு உலறி - நினையுந்தொறும் வற்றி, பழங்கண் கொண்ட கதழ்ந்து வீழ் அவிர் அறல் - துன்பங் கொளற்கு ஏதுவான விரைந்து விழும் விளங்கும் அறல் நீர், வெய்ய உகுதர-வெப்பங் கொண்டவாய்ச் சொரிய, வெரீஇ - அஞ்சி, சில்வளை சொரிந்த மெல் இறை முன்கை - சில வளைகளும் சொரியப்பெற்ற மெல்லிய சந்தினையுடைய முன்கை யுடையளும், பூவீ கொடியிற் புல்லெனப் பையெனப் போகி - பூக்கள் ஒழியப்பெற்ற கொடிபோலப் பொலிவற மெல்லெனச் சென்று, அடர் செய் ஆய் அகல் சுடர் துணையாக - பொற் றகட்டா னியன்ற அழகிய அகலிடத்துத் தான் ஏற்றிய விளக்கே துணையாக, இயங்காது வதிந்த நம் காதலி - எங்கணும் இயங்க வலியற்று ஓரிடத்தே தங்கியுள்ளவளுமாகிய நம் காதலியின், உயங்கு சாய் சிறுபுறம் முயங்கிய பின் - வருந்தி மெலிந்த பிடரினைத் தழுவிய பின்,

௯. மறவல் ஓம்புமதி எம்மே - எம்மை மறத்தலை நீக்குவாயாக.

(முடிபு) நெஞ்சே! அன்று ஒழிந்தன்று மிலை; வந்து நனி வருந்தினை; குன்றம் எம்மோடிறத்தலும் செல்லாய், ஒழியச் சூழ்ந்தனையாயின் செல் இனி; நின் உள்ளம் சிறக்க; நம் காதலி சிறுபுறம் முயங்கிய பின்னே எம்மை மறவல் ஓம்புமதி.

(வி - ரை.) மகுளி - ஓசை. மகுளியின் என ஒப்பு உரைத்தது ஓசை மாத்திரம் கருதி; பொருள் தெரிதல் குடிஞை ஓசைக்கே உள்ளது. தெரிந்து - தெரிய எனத் திரிக்க. பொருள் தெரிய இசைத்தல், குத்திப்புதை என்பதோர் பொருள் தெரிய இசைத்தல் என்பர். இனி, பொருள் - போ வார் காரியமுமாம்; ஆந்தையின் குரல் போவார் காரியத்தை உணர்த்தும் நிமித்தமாதலின். உள்ளம் - நெஞ்சினது உள்ளம். நறவின் சேயிதழைச் செவ்வரிக்கு உவமையாகவும், குவளையைக் கண் வடிவிற்கு உவமையாகவும் கூறுவாரும் உளர். கொண்ட - கொள்ளுதற்கு ஏதுவான. குறிப்புரைகாரர் விரைந்து விழுகின்ற எனப் பொருள் செய்திருத்தலின் 'கதழ்ந்து வீழ்' என்௪பதே அவர் கொண்ட பாடமாகும். 'கலிழ்ந்து' எனும் பாடத்திற்குக் 'கலங்கி' என்க. அறல் - அற்று விழுகின்ற நீர். வெரீஇ - பிறர் காண்பரென அஞ்சி. வளை பலவும் முன்பே கழன்றொழிந்தன என் பான் சில்வளை சொரிந்த என்றான். முன் கையையுடைய காதலி, வதிந்த காதலி எனக் கூட்டுக. மறைய நின்று பின்னே தழுவுதலான்,