பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௫௪

அகநானூறு

[பாட்டு

 தென்றல் தூற்றும் வைப்பின் காடு எனவும் உவலைக் கூவலைக் களிற்றின நிரை தூர்க்கும் காடு எனவும் இயையும்.

(வி - ரை.) பிணவு பசித்தெனச் செந்நாயேற்றை. கேழல் தாக் கப் பிணவல் தீண்டலின் பரீஇ உ.திர்ந்த ஈந்தின் பரலையுடைய மட் சுவலாகிய வன்னிலத்தில் கூ.வலர் உடைத்த கூவல் என்க.

மனைப் படப்பையில் நொச்சியின் கண் மௌவல் படர்ந்திருத்தல், 'மயிலடி யிலைய மாக்குரல் நொச்சி, மனை நடு மௌவலோ டூழ்முகை யவிழ' என்னும் நற்றிணை(ககரு)ச் செய்யுளானும், 'மனை யிள நொச்சி மௌவல் வான்முகை, (உக) மனைய, தாழ்வி னொச்சி சூழ்வன மல ரும், மௌவல் மாச்சினை, (உங) என்னும் இந்நூற் செய்யுட்களானும் அறியப்படும். அமைந்தனை யாயின் - அமைந்து போந்தனையாயின் என விரிக்க. மனை நக - இல்லம் பொலிய என்று மாம். கோடு அலை கொம்பு. பூ உதிர்க்கும் கொம்பு; அது தென்றலுக்கு உவமை. சுரியல் - சுருண்ட தலைமயிர். ஈன்றணிமைபற்றிப் புறத்தே செல்ல லாகாமையின் ஈரிடத்தும் இளைப்பட்ட என்றார்.

பன்றி புல்வாய் நாயென மூன்றும், ஒன்றிய வென்ப பிண வென் பெயர்க்கொடை' பிணவ லெனினு மவற்றின் மேற்றே' என் னும் சூத்திரங்களால், 'பிணவு' எனவும் 'பிணவல்' எனவும் வந்தன. களிறு தாம் இகழ்ந்து இயங்கு இயவில் கானவர் அகழ்ந்த குழி என்க .

 

 
22. குறிஞ்சி
 

[(1) வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்துத் தலைமகள் ஆற்றா ளாகத் தோழி தலைமகனை இயற்பழிப்பத் தலைமகள் இயற்பட மொழிந்தது. (2) தலைமகன் இரவுக்குறி வந்து சிறைப்புறத்தானாகத் தோழியாற் சொல்லெடுக்கப்பட்டுத் தலைமகள் சொல்லியதூஉமாம்.]

 


அணங்குடை நெடுவரை யுச்சியின் இழிதருங்
கணங்கொள் அருவிக் கான்கெழு நாடன்
மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்லல்
இதுவென அறியா மறுவரற் பொழுதில்

ரு) படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை
நெடுவேட் பேணத் தணிகுவள் இவளென
முதுவாய்ப் பெண்டிர் அதுவாய் கூறக்
கள நன் கிழைத்துக் கண்ணி சூட்டி
வளநகர் சிலம்பப் பாடிப் பலிகொடுத்

க0) துருவச் செந்தினை குருதியொடு தூ உய்
முருகாற்றுப் படுத்த உருகெழு நடு நாள்
ஆர நாற அருவிடர்த் ததைந்த

 

1. தொல். மர. ௫௮. 2. மர. ௫௬.