பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

களிற்றியானை நிரை

௫௯
கடிமதிற் கதவம் பாய்தலின் தொடிபிளந்து
நுதிமுகம் 1மழுகிய மண்ணைவெண் கோட்டுச்
சிறுகண் யானை நெடுநா ஒண்மணி
கழிப்பிணிக் கறைத்தோல் பொழி2கணை யுதைப்புத்

கரு) 3தழங்குகுரல் முரசமொடு முழங்கும் யாமத்துக்
கழித்துறை செறியா வாளுடை யெறுழ்த்தோள்
இரவுத்துயில் மடிந்த தானை
உரவுச்சின வேந்தன் பாசறை யேமே.

-ஆவூர் மூலங் கிழார்.

(சொ - ள்.) க-ரு. வேளாப் பார்ப்பான் - யாகம் பண்ணாத ஊர்ப் பார்ப்பான், வாள் அரம் துமித்த - கூரிய அரத்தால் அறுத்தெடுத்த, வளை களைந்து ஒழிந்த - வளைகள் போக எஞ்சிய, கொழுந்தின் அன்ன - சங்கின் தலையைப் போன்ற, தளை பிணி அவிழாச் சுரி முகப் பகன்றை - கட்டுண்ட பிணிப்பு விரியாத சுரிந்த முகத்தினை யுடைய பகன்றையின் அரும்புகள், சிதரல் அம் துவலை தூவலின் மலரும் - சிதறுகின்ற அழகிய மழைத் துளிகள் வீசுதலால் மலரும் (காலமாகிய), தண் பெயல் நின்ற தைஇ கடைநாள் - குளிர்ந்த பெயல் நின்ற தைத் திங்களாகிய முன் பனியின் கடை நாளில்,

சு. வயங்கு கதிர் கரந்த வாடை வைகறை - எழுகின்ற ஞாயிறு மறைந்திருக்கும் வாடையுடன் கூடிய விடியற்காலையில்,

எ-க0. மங்குல் மா மழை - இருண்ட பெரிய மழை, விசும்பு உரிவதுபோல் - விசும்பு தோலுரிவது போல, வியல் இடத்து ஒழுகி - அகன்ற வானிடத்தே யியங்கி, தென்புலம் படரும் - தென்றிசைக்கண் போய்ச் சேரும், பனி இரும் கங்குலும் - பனியுடன் கூடிய கரிய கங்குலின் வெள்ளத்தையும், நன்னுதல் தமியள் நீந்தித் தம் மூரோளே - சிறந்த நெற்றியினளாய நம் தலைவி தனியளாய் நீந்தித் தமது ஊரின்கண் உள்ளாள் ;

க0-அ. யாமே-யாம், கடி மதில் கதவம் பாய்தலின் - காவலை யுடைய மதிற் கதவினைப் பாய்தலினால், தொடி பிளந்து நுதிமுகம் மழுகிய மண்ணை வெண்கோட்டுச் சிறுகண் யானை - பூண் பிளக்கப் பட்டுக் கூரிய முனை மழுங்கிய மொட்டையான வெள்ளிய கோட் டினையும் சிறிய கண்ணினையுமுடைய யானையின், நெடுநா ஒண் மணி - நீண்ட நாவினையுடைய ஒளி பொருந்திய மணியின் ஓசையும், கழிப் பிணிக் கறைத்தோல் பொழிகணை யுதைப்பு - கழிகளுடன் பிணிக் கப்பட்ட கரிய தோலாகிய கேடகத்துப் பொழியும் அம்புகள் தைத்தலால் எழும் ஓசையும், தழங்கு குரல் முரசெமொடு முழங்கும் யாமத்து - முழங்கும் ஓசையினை யுடைய முரசொலியுடன் சேர்ந்தொலிக்கும் நள்ளிரவில், கழித்து உறை செறியா-உறையினின்றும் உருவி மீண்டும்


1. மருங்கிய மொண்ணை. 2. கணையுதைப்ப. 3. தழங்குரல் முரசமொடு மயங்கும்.