பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௬௨

அகநானூறு

[பாட்டுபுலந்த நெஞ்சமொடு நோவல் - தலைவர் வாராமையால் வெறுத்த நெஞ்சுடன் வருந்தற்க;

கஅ-உஉ. பொருநர் செல்சமம் கடந்த வில் கெழு தடக்கை - போர்புரியும் பகைவர் எதிர்ந்துவரும் போரினை வென்றொழித்த வில்லினைக் கொண்ட பெரிய கையினை யுடையானும், பொதியில் செல்வன் பொலம் தேர் திதியன் - பொதியில் மலைக்குரிய செல்வனும் பொன்னாலாய தேரினையுடையானுமாகிய திதியன் என்பானது, இன்னிசை இயத்திற் கறங்கும் கல்மிசை அருவிய காடு இறந்தோர் - இனிய வெற்றி முரசுபோல ஒலிக்கும் மலையுச்சியினின்று வீழும் அருவிகளையுடைய காடுகளைத் தாண்டிப் பொருளீட்டச் சென்றோராய நம் தலைவர்,

கசு - அ. குறுமகள் நோயியர் என் உயிரென - இளையாளே, (நின்னை இங்ஙனம் துயருறச் செய்த) என் உயிர் வருந்துவதாக என்றாற் போலும், மெல்லிய இனிய கூறி - மென்மை வாய்ந்த இனிய சொற்களைக் கூறிக்கொண்டு, வல்லே வருவர். விரைந்து வந்துறுவர்.

(முடிபு) தோழி வாழி இகழுநர் இகழா இள நாளமையம் குறி செய்தோர் என, வாராமையின் புலந்த நெஞ்சமொடு கண் பனி வார்பு உறைப்ப நோவல்; காடிறந்தோர், குறுமகள் நோயியர் என் உயிரென இனிய கூறி வல்லே வருவர்.

(வி - ரை.) எக்கர் வதுவை நாற்றம் கஞல, குயில் கூவ, தாது பொன் சொரிந்தன்னவாகலின் இகழுநர் இகழா இளநாளமையம் என்க. சாஅய் - சாய எனத் திரிக்க. அறல் - நீர் வற்றிய காலத்து மணல் அற்றற்றிருப்பது. இளவேனிற் பொழுதிலே ஆடவரும் மக ளிரும் சோலைகளிலுள்ள எக்கரில் இன்ப விளையாட்டு நிகழ்த்துவராகலின் வதுவை நாற்றம் கஞல என்றார். ஊழ் கொள்பு கூவுதலாவது பேடை கூவச் சேவல் கூவுதல். குயில் நடு நின்று உரைப்ப போல என்பதனை, 1'ஊடினீ ரெல்லாம் உருவிலான் றன்னாணை, கூடுமி னென்று குயில்சாற்ற' என்பதனால் அறிக. அடு நின்று எனப் பிரித்து வருத்தா நின்று என்று உரைத்தலுமாம். சிதர் - வண்டு, கஞல, கூவ எனும் எச்சங்கள் இகழாத என்னும் வேறு வினை கொண்டு முடிந்தன. இளநாளென்றார் இளவேனிலை. குறு மகள் என்றது தோழி தலைமகளை விளித்ததுமாம். என்னுயிர் நோவதாக வென்று நீ நோவாதே என்றுரைத்துப் பின், காடிறந்தோர் என்னுயிர் நோவதாக என மெல்லிய இனிய கூறி வருவரென வேறறுத்து உரைத்தலுமாம்.


 
26. மருதம்
 

[தலைமகன் தோழியை வாயில் வேண்டி, அவளால் தான் வாயில் பெறாது ஆற்றாமையே வாயிலாகப் புக்குக் 2கூடியவன் நீக்கத்துக்கண் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது.]


1. சிலப். வேனிற்காதை இறுதி வெண்பா. (பாடம்) 2. கூடியதலைமகன்.