பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௭௦

அகநானூறு

[பாட்டு



தும் உயிர் தரித்திரேன் எனத் தெளிவித்து, பல் மாண் தாழக் கூறிய தகை சால் நல்மொழி - பல மாண்புகளும் தாழ்ந்திடக் கூறிய அழகு மிக்க நல்ல மொழியை,

க-ரு. தொடங்கு வினை தவிரா அசைவு இல் நோன் தாள் - தான் தொடங்கிய வினையைக் கைவிடாத தளர்ச்சியில்லாத வலிய முயற்சியினையுடையதும், கிடந்து உயிர் மறுகுவதாயினும் இடம் படின் வீழ்களிறு மிசையா - பட்டினி கிடந்து உயிர் வருந்துவதாயினும் தான் வீழ்த்திய களிறு இடப்பக்கம் வீழின் அதனைத் தின்னாததுமாகிய, புலியினும் சிறந்த தாழ்வு இல் உள்ளம் தலைத்தலை சிறப்ப-புலியைக் காட்டினும் மேம்பட்ட என்றும் தளர்தலில்லாத ஊக்கம் மேன்மேல் மிக, செய்வினைக்கு அகன்ற காலை - பொருளீட் டும் வினைக்குப் பிரிந்து அகன்ற காலத்தே,

கஉ-௪. மறந்தனிர் போறிர் எம் என - எம்மிடத்து மறந்து விட்டீர்போலும் என்று, சிறந்த நின் எயிறு கெழு துவர் வாய் இன் நகை அழுங்க - சிறந்த நினது பற்கள் விளங்கும் பவளம் போன்ற வாயின் இனிய நகைகெட, வினவல் ஆனாப் புனையிழை - வினவுதல் நீங்காத அழகிய அணிகளை யுடையவளே, இனிகேள் - இப்பொழுது யான் கூறுவதைக் கேட்பாயாக;

கரு-க௯. வெம்மை தண்டா எரி உகு பறந்தலை - வெப்பம் குறையாத எரிபரந்த பாழிடத்தே, கொம்மை வாடிய இயவுள் யானை - பெருமை யொழிந்த வழிச் செல்லும் யானை, நீர் மருங்கு அறியாது தேர் மருங்கு ஓடி - நீருள்ள இடம் அறியாமல் பேய்த்தேர் தோன்றும் இடமெல்லாம் ஓடி, அறுநீர் அம்பியின் நெறிமுதல் உணங்கும் - நீரற்ற ஆற்றிற் கிடக்கும் ஓடம்போல வழியிடத்து வருந்திக்கிடக்கும், உள்ளுநர்ப் பனிக்கும் - நினைப்போரை வருத்தும், ஊக்கு அரும் கடத்திடை - ஊக்கம் ஒழியும் காட்டினிடத்திலே,

௨௦-௩. எள்ளல் நோனாப் பொருள் தரல் விருப்பொடு - பிறர் இகழ்தலைப் பொறாத பொருள் ஈட்டி வரும் விருப்பத்துடன், நாணு தளையாக வைகி - தொடங்கிய வினையை முடிக்க வேண்டுமென்னும் மானமே தளையாகக் கட்டுண்டிருந்து, மாண் வினைக்கு - மாண்புற்ற வினையின் பொருட்டு, உடம்பு ஆண்டு ஒழிந்தமை அல்லதை - என் உடம்பு ஆங்குப் பிரிந்து நின்றதல்லது, மடம் கெழு நெஞ்சம் நின் மயதுவே - அறியாமையுடைய என் நெஞ்சம் நின் கண்ணதே யாகும்; (இதனை யறியாமையின் இங்ஙனம் வினைவுகின்றனை.)

(முடிபு) உண்கண் நினையாது கழிந்த வைகல் வாழலென் யானெனத் தேற்றிக் கூறிய நன்மொழியை, புலியினுஞ் சிறந்த தாழ்வில் உள்ளம் சிறப்பச் செய்வினைக்கு அகன்றகாலை எம்மிடத்து மறந்தனிர் போறிர் என, இன் நகை அழுங்க வினவல் ஆனாப் புனை யிழை கேள் இனி ; உள்ளுநர்ப் பனிக்கும் அருங் கடத்திடைப் பொருள் தரல் விருப்பொடு வைகி உடம்பு ஆண்டு ஒழிந்ததை அல்லதை நெஞ்சம் நின்னுழை யதுவே.

(வி - ரை.) நோன்றாட் புலியெனவும் மிசையாப் புலி யெனவும் தனித்தனி இயையும். இடம் வீழ்ந்ததனை உண்ணாத புலியினும்