பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

களிற்றியானை நிரை

௭௧

 சிறந்த ஊக்கம் என்னும் இக் கருத்தினை 1'கடுங்கட் கேழல் இடம்பட வீழ்ந்தென, அன்றவ ணுண்ணா தாகி வழிநாட், பெருமலை விட ரகம் புலம்ப வேட்டெழுந், திருங்களிற் றொருத்த னல்வலம் படுக்கும், புலி பசித் தன்ன மெலிவி லுள்ளத், துரனுடை யாளர்' என்பதனான் அறிக. (எஃகு) உற்று - உறுதலால். தெரிதகு - ஆராயத் தக்க எனவும், பன்மாண் - பலமுறை எனவும், இயவுள் - தலைமை எனவும் உரைத்தலுமாம். யானை ஓடி உணங்கும் கடம் என்க. நெஞ்சினை, மடங்கெழு நெஞ்சு என்றது தலைவியிடத்திருந்தும் தன் ஆற்றாமையை அறிவித்திலது என்று.

(மே - ள்) 2'கரணத்தி னமைந்து' என்னுஞ் சூத்திரத்து, மறந்தீர் போலும் என்ற மனையோள் ஏமுறு கிளவிக்குத் தலைவன் எதிர் கூறிய தாகும் இச் செய்யுள் என் றனர் நச்.


 
30. நெய்தல்
 

[பகற்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது.]


நெடுங்கயிறு வலந்த குறுங்கண் அவ்வலைக்
கடல்பா டழிய இனமீன் முகந்து
துணைபுணர் உவகையர் பரத மாக்கள்
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி

ரு) உப்போய் உமணர் அருந்துறை போக்கும்
ஒழுகை நோன்பக டொப்பக் குழீஇ
அயிர்திணி அடைகரை ஒலிப்ப வாங்கிப்
பெருங்களத் தொகுத்த உழவர் போல
இரந்தோர் வறுங்கலம் மல்க வீசிப்

க0) பாடுபல அமைத்துக் கொள்ளை சாற்றிக்
கோடுயர் திணிமணல் துஞ்சுந் துறைவ
பெருமை என்பது கெடுமோ ஒருநாள்
மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத்
தண்ணறுங் கானல் வந்து நும்

கரு) வண்ணம் எவனோ என்றனிர் செலினே.

- முடங்கிக் கிடந்த நெடுஞ் சேரலாதன்.

(சொ - ள்.) க-கக. நெடுங் கயிறு வலந்த குறுங்கண் அவ்வலை - நெடிய கயிறு கட்டப்பெற்ற குறிய கண்களையுடைய அழகிய வலையில், கடல் பாடு அழிய இன மீன் முகந்து - கடலின் பெருமை குன்ற இனமாகிய மீன்களை முகந்து, துணை புணர் உவகையர் பரத மாக்கள் இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி - துணையுடன் கூடிய மகிழ்ச்சி யுடையராய் இளையரும் முதியருமாய நுளையர்கள் சுற்றத்துடன் நெருங்கி, உப்பு ஓய் உமணர் அருந்துறை


1. புறம். க௬௦. 2. தொல், கற்பு. ௫.