பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

களிற்றியானை நிரை

௭௩



றெய்தி வருந்துகின்றானை ஒரு நாள் வந்திலரென மாயஞ் செப்பியவாறும், நீர் வாராமையின் வண்ணம் வேறுபடுமென ஏற்றுக் கோடுமெனக் காரணங் கூறியவாறும் காண்க; தம்மேல் தவறின்றாகக் கூறுங்காலத்து இது கூறுவர் என்றதற்குக் குறித்த காலை என்றார்' என்றுரைத்தனர் நச்.


 
31. பாலை
 

[பிரிவிடை ஆற்றாளாயினாளென்று பிறர் சொல்லக் கேட்டு வேறு பட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது.]


நெருப்பெனச் சிவந்த உருப்பவிர் மண்டிலம்
புலங்கடை மடங்கத் தெறுதலின் ஞொள்கி
நிலம்புடை பெயர்வ தன்றுகொல் இன்றென
மன்னுயிர் மடிந்த மழைமா றமையத்

ரு) திலையில வோங்கிய நிலையுயர் யாஅத்து
மேற்கவட் டிருந்த பார்ப்பினங் கட்குக்
கல்லுடைக் குறும்பின் வயவர் வில்லிட
நிணவரிக் குறைந்த நிறத்த வதர்தொறுங்
கணவிர மாலை யிடூஉக் கழிந்தன்ன

க0) புண்ணுமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர்
கண்ணுமிழ் கழுகின் கானம் நீந்திச்
சென்றார் என்பிலர் தோழி வென்றியொடு
வில்லலைத் துண்ணும் வல்லாண் வாழ்க்கைத்
தமிழ்கெழு மூவர் காக்கும்

கரு) மொழிபெயர் தேஎத்த பன்மலை இறந்தே.

-மாமூலனார்.

(சொ - ள்.) கஉ. தோழி - தோழியே,

க-ச. நெருப்பு எனச் சிவந்த - தீயைப் போன்று சினந் தெழுந்த, உருப்பு அவிர் மண்டிலம் - வெம்மை விளங்கும் ஞாயிறு, புலம் கடை மடங்கத் தெறுதலின் - விளை நிலத்திடத்தே யுள்ள பயிர்கள் தீய்ந்தொழிய அழித்தலின், இன்று நிலம் ஞொள்கிப் புடை பெயர்வது அன்று கொல் என - இன்று நிலவுலகம் குறைவுற்று நிலைபெயரும் காலம் அன்றோ என்று சொல்லும்படி, மன்னுயிர் மடிந்த மழை மாறு அமையத்து - நிலை பெறும் உயிர்கள் மடிதற் கேதுவாகிய மழை பெய்யாதொழிந்த இக் காலத்திலே,

ரு-கக. இலை இல ஓங்கிய உயர்நிலை யாஅத்து - இலைகள் இல வாகி மிக ஓங்கிய நிலையையுடைய யாமரத்தின், மேற்கவட்டு இருந்த பார்ப்பு இனங்கட்கு - மேலுள்ள கிளைகளிலிருந்த பார்ப்புக்களுக்கு, கல்லுடைக் குறும்பின் வயவர் வில்லிட - கற்களை யுடைய சீறூரில் உள்ள மறவர்கள் வில்லால் அம்பினை எய்தலால், குறைந்த நிறத்த அதர்தொறும் - பொலிவற்ற நிறத்தினையுடைய வழிதோறும், கண