பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

களிற்றியானை நிரை

௮௧




வில்லேர் வாழ்க்கை விழுத்தொடை மறவர்
வல்லாண் பதுக்கைக் கடவுட் பேண்மார்
நடுகற் பீலி சூட்டித் 1துடிப்படுத்துத்
தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும்

க௦) போக்கருங் கவலைய புலவுநா றருஞ்சுரம்
துணிந்துபிறள் ஆயினள் ஆயினும் அணிந்தணிந்
தார்வ நெஞ்சமொ டாய்நலன் அளைஇத்தன்
மார்புதுணை யாகத் துயிற்றுக தில்ல
துஞ்சா முழவின் கோவற் கோமான்

கரு) நெடுந்தேர்க் காரி கொடுங்கான் முன்றுறைப்
பெண்ணையம் பேரியாற்று நுண்ணறல் கடுக்கும்
நெறியிருங் கதுப்பினென் பேதைக்
கறியாத் தேஎத் தாற்றிய துணையே.

- அம்மூவனார்.

(சொ - ள்.) க-உ. வான் தோய் இஞ்சி - வான் அளாவிய மதிலை யுடைய, நல் நகர் புலம்ப - நன்றாகிய மனை தனிமையுற, ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள் - பெற்றுப் பாதுகாத்த எம்மையும் நினையாளாய்,

௩-கக. தனி மணி இரட்டும் - ஒப்பற்ற மணி மாறி மாறி யொலிப்பதும், தாளுடைக் கடிகை நுழை நுதி - கடையாணி யிட்ட காம்பினையும் கூரிய முனையையும் உடையதுமாய, நெடுவேல் - நெடிய வேலையுடைய, குறும்படை மழவர் - கோட்டை மழவராகிய, முனை ஆ தந்து - வெட்சியார் போர்முனையில் வென்று ஆக்களை மீட்டு, முரம்பின் வீழ்த்த - அவ் வெட்சியாரை மேட்டு நிலத்தே வீழ்த்திய, வில் ஏர் வாழ்க்கை - வில்லையே ஏராகக்கொண்டு வாழும் வாழ்க்கையினை யுடைய, விழுத்தொடை மறவர் - சிறந்த அம்பினை யுடைய கரந்தை வீரர்கள், வல்லாண் பதுக்கைக் கடவுள் பேண்மார் - தங்கள் வலிய ஆண்மையாலிட்ட பதுக்கைக்கண் ணுள்ள கடவுளை வழிபடற்கு, நடுகல் பீலி சூட்டி - அந் நடு கல்லில் மயிற் றோகைகளைச் சூட்டி, துடி படுத்து - துடியை அடித்து, தோப்பிக் கள்ளொடு - நெல்லாலாக்கிய கள்ளொடு, துரூஉப் பலி கொடுக்கும் - செம்மறிக் குட்டியைப் பலி கொடுக்கும், போக்கு அரும் கவலைய - வழிப்போதற்கு இயலாத கவர்த்த வழிகளையுடைய, புலவு நாறு அருஞ் சுரம்-புலால் வீசும் அரிய சுரநெறியில், துணிந்து பிறள் ஆயினள் ஆயினும் - செல்லத் துணிந்து பிறளொருத்தியாக ஆயினாள் எனினும்,

க௪-அ. துஞ்சா முழவின் கோவல் கோமான் - முழவொலி யறாத திருக்கோவலூர்க்குத் தலைவனாகிய, நெடுந்தேர்க்காரி கொடுங்கால் முன்றுறை - நெடிய தேரினையிடைய காரியின் கொடுங்கால் என்னும் ஊரினிடத்தே முன்றுறையில் உள்ள, பெண்ணை அம் பேர்


1. (பாடம்) துடிபடுத்து. துடிப்படத்.