பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௮௨

அகநானூறு

[பாட்டு


யாற்று நுண் அறல் கடுக்கும் - அழகிய பெரிய பெண்ணையாற்றின் நுண்ணிய கருமணலை யொக்கும், நெறி இரும் கதுப்பின் என் பேதைக்கு - நெளிந்த கரிய கூந்தலையுடைய என் மகட்கு, அறியாத் தேஎத்து ஆற்றிய துணை - அவளை யறிவார் பிறர் இல்லாத நாட்டிலே அவளைச் செலுத்திப்போம் துணைவன்,

கக-௩. அணிந்து அணிந்து ஆர்வ நெஞ்சமொடு - அன்பு மிக்க உள்ளத்தோடு அவளைப் பலகாலும் அணிவித்து, ஆய் நலன் அளைஇ - அவளது அழகிய நலனைத் துய்த்து, தன் மார்பு துணையாகத் துயிற்றுக - தனது மார்பு பற்றுக்கோடாகத் துயில்விப்பானாக.

(முடிபு) ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள், நகர் புலம்ப, அருஞ்சுரம் துணிந்து பிறள் ஆயினள் ஆயினும், என் பேதைக்கு அறியாத் தேயத்து ஆற்றிய துணை, அணிந்தணிந்து ஆய் நலன் அளைஇத் தன் மார்பு துணையாகத் துயிற் றுக தில்ல.

(வி - ரை.) எம்மும் என்னும் உம்மை ஆயத்தினையும் பந்து கழங்கு முதலியவற்றையும் தழுவி நின்றது. சிறந்த நகர் எனினும் இவ ளொருத்தியின்றி விளக்கம் ஒழிந்தது என்றவாறு. குறும்படை - கோட்டை; குறும்பை அடைந்த என்றுமாம்; குறும்பு - சிற்றரண். மழவர் - வெட்சி வீரர் எனக்கொண்டு, அவரது முனையிடத்து ஆ எனலுமாம். பதுக்கைக் கடவுள் - பதுக்கையிடத்துக் கல்லில் உறையும் கடவுள். விழுத்தொடை - தப்பாத அம்பென்றும், துன்பஞ் செய்யும் அம்பென்றுமாம். துணிந்து என்றது சுரம்போதற் கருமையையும், பிறளாயினள் என்றது தம்மை மறந்து செல்லுதற் கருமையையும் புலப்படுப்பனவாம். தில், விழைவுப் பொருட்டு. பெண்ணையாற்று முன்றுறை யென்க. துணை - தலைவன்; துணையாவான் அவனே யென்னும் குறிப்பிற்றுமாம்.

(மே - ள்.) 1'தன்னு மவனும்' என்னும் சூத்திரத்துத் தலைவன் தலைவிபால் மிகவும் அன்பு செய்கவென்று நற்றாய் தெய்வத்தைப் பராவியதற்கு இச் செய்யுளை எடுத்துக் காட்டினர் நச்.

இச் சூத்திரத்து இச் செய்யுளை எடுத்துக் காட்டி, இது செவிலி தெய்வம் பராஅயது என்பர் இளம்.


 
36. மருதம்
 

[தலைமகள் பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகனொடு புலந்து சொல்லியது.]


பகுவாய் வராஅல் பல்வரி இரும்போத்துக்
கொடுவாய் இரும்பின் கோளிரை துற்றி
ஆம்பல் மெல்லடை கிழியக் குவளைக்
கூம்புவிடு பன்மலர் சிதையப் பாய்ந்தெழுந்


1. தொல். அகத். ௩௬.