உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை௮௪

அகநானூறு

[பாட்டு


யன் - கொய்த பிடரி மயிரினை யுடைய குதிரைகள் பூண்ட கொடி எடுத்த தேரினையுடைய பாண்டியன் நெடுஞ்செழியன், ஆலங் கானத்து அகன் தலை சிவப்ப - தலையாலங்கானம் என்ற ஊரின் அகன்ற இடனெல்லாம் செந்நிறமடைய, சேரல் செம்பியன் சினம்கெழு திதியன் - சேரன் சோழன் சினம் மிக்க திதியன், போர்வல் யானைப் பொலம்பூண் எழினி - போரில் வலிய யானைகளை யுடைய பொற்பூண் அணிந்த எழினி, நார் அரி நறவின் எருமையூரன் - பன்னாடையால் அரிக்கப்பெற்ற கள்ளினையுடைய எருமையூர்க்குத் தலைவன், தேம் கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின் இருங்கோ வேண்மான் - தேன் மணங்கமழும் மார்பிலே பூசிப் புலர்ந்த சந்தனத்தை யுடைய இருங்கோ வேண்மான், இயல்தேர்ப் பொருநன் என்ற செவ்விதின் இயன்ற தேரினையுடைய பொருநன் என்று கூறப்பட்ட, எழுவர் நல் வலம் அடங்க - எழுவரது சிறந்த வெற்றிகள் சாய்ந்தொழிய, ஒரு பகல் - ஒரு பகலிலே, முரசொடு வெண்குடை அகப் படுத்து - அவர் தம் முரசுகளுடன் வெண் குடைகளைப் பற்றிக் கொண்டு, உரை செல - தன் புகழுரை எங்கும் பரவ, கொன்று களம் வேட்ட ஞான்றை - அவர்தம் படைகளைக் கொன்று களவேள்வி செய்த காலத்து, வென்றிகொள் வீரர் ஆர்ப்பினும் பெரிது - வெற்றியடைந்த வீரர்கள் ஆர்த்த ஆரவாரத்திலும் பெரிதாக உள்ளது.

(முடிபு) ஊர! வையை அகன்றுறைக் காவில், மடந்தையொடு வதுவை அயர்ந்தனை யென்ப; அலர், செழியன் எழுவர் நல் வலம் அடங்கக் கொன்று களம் வேட்ட ஞான்றை வீரர் ஆர்ப்பினும் பெரிது.

வராற் போத்து, துற்றி, கிழிய எழுந்து, சிதையப் பாய்ந்து, மயக்கி, வாங்க வாராது, உழக்கும் எனவும், செழியன் அகன்றலை சிவப்ப எழுவர் நல்வலம் அடங்க அகப்படுத்துக் கொன்று களம் வேட்ட எனவும் இயையும்.

(வி - ரை.) கோள் - கொள்ளப்பட்ட என்றுமாம். இரும்பு- தூண்டில் முள். கூடற்பதியில் மருதமரம் உயர்ந்த காவினையுடைய வையையாற்றின் துறையானது, திருமருதந்துறையெனச் சான்றோர் பலராலும் பாராட்டிக் கூறப்பெறும் ; 1'திருமருத நீர்ப்பூந் துறை,' 'தீம்புனல் வையைத் திருமருத முன்றுறை,' ' திருமருத முன்றுறை முற்றங் குறுகி' எனப் பரிபாடலிலும், 2'வருபுனல் வையை மருதோங்கு முன்றுறை' எனச் சிலப்பதிகாரத்திலும் வருதல் காண்க, பகைவரது முரசுங் குடையும் போரில் பற்றிக் கொள்ளல் வெற்றிக்கு அடையாளமாகும். 'சினங்கெழு வேந்தரை, அருஞ்சமம் சிதையத் தாக்கி முரசமொடு, ஒருங்ககப் படேஎ னாயின்' என இந் நெடுஞ் செழியனே வஞ்சினங் கூறுதல் காண்க.

(உ - றை.) 'வேட்டுவன் தூண்டிலிற் கோத்த இரையை இலையின் கீழ்க் கிடந்த வாளை நுகர்ந்து, தூண்டிற் றுவக்கு விடாது இலை கிழிய எழுந்து குவளைப் பூ முறியப் பாய்ந்து அக் குவளையைச் சூழ்ந்த வள்ளையை


1. பரி, எ: அ௩; கக: ௩௦; உஉ: ௪௫. 2. சிலப். க௪: எஉ.