பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

களிற்றியானை நிரை

௮௯

வேங்கையும் வண்டுணா மலர் மரம் எனக் கூறுதல் ஆராய்தற்குரியது. துணை - தலைவி; முன்னிலை. உள்ளி - உள்ள எனத் திரிக்க. தலைவியை நினைந்து எனப் பொருள் கொள்ளின், துணைப்படர்ந்து என்று பாடங் கொள்ளுதல் வேண்டும். தேறி என்னும் எச்சம் மலர்ந்த என்னும் பிறவினை கொண்டு முடிந்தது. கதிர்த்தலை கழிந்ததென்பார் கோற்றலை என்றார். இருவியையுடைய புனம் எனக் கூட்டுக. கொய்தொழி புனம் என்றது புனம் என்னும் பெயரளவாய் நின்றது. பெயரலன் கொல்லோ, பெயரமாட்டானாய் என்றுரைத்தலுமாம். கூஉங்கண்ணஃது: விரித்தல் விகாரம். அது அதை எனத் திரிந்தது; அது - அதனை. அறிவுறல், ஈண்டுப் பிறவினை.

இச் செய்யுட்குக் குறிக்கப் பெற்றுள்ள கருத்துக்கள் மூன்றும் தோழி கூற்றாகவுள்ளன. நச்சினார்க்கினியர் கருத்தின்படி இச் செய்யுள் தலைவி கூற்றாகின்றது.

(மே - ள்.) 1'மறைந்தவற் காண்டல்' என்னும் சூத்திரத்து 'தன்குறி தள்ளிய தெருளாக்காலை, வந்தனன் பெயர்ந்த வறுங்கள நோக்கித், தன்பிழைப் பாகத் தழீஇத் தேறல்' என்பதற்கு இச் செய்யுளை எடுத்துக் காட்டி, இதனுள் ஊசன் மாறுதலும் புனமும் தன் குறி தள்ளிய இடன்; மறந்திசின் என்றது தெருளாக்காலை; கூஉங் கண்ணது ஊரென உணர்த்தாமையின் இடையீடு படுவதன்றி அவன்கண் தவறுண்டோ வெனத் தன் பிழைப்பாகத் தழீஇயினாள் என்றுரைத்து, இது சிறைப்புறமாக வரைவு கடாயது என்றும், 2'அவன் வரம் பிறத்தல்' என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுள் தலைவி களஞ் சுட்டியதாகும் என்றும் கூறினர் நச்.


 
39. பாலை
 

[பொருண் முற்றிய தலைமகன் தலைமகளைக் கண்டு சொல்லியது.]



க) ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிப்படர்ந்
துள்ளியும் அறிதிரோ எம்மென யாழநின்
முள்ளெயிற்றுத் துவர்வாய் முறுவல் அழுங்க
நோய்முந் துறுத்து நொதுமல் மொழியனின்

ரு) ஆய்நல மறப்பெனோ மற்றே சேணிகந்து
ஒலிகழை பிசைந்த ஞெலிசொரி யொண்பொறி
படுஞெமல் புதையப் பொத்தி நெடுநிலை
முளிபுல் மீமிசை வளிசுழற் றுறாஅக்
காடுகவர் பெருந்தீ யோடுவயின் ஓடலின்

க0) அதர்கெடுத் தலறிய சாத்தொ டொராங்கு
மதர்புலி வெரீஇய மையல் வேழத்
தினந்தலை மயங்கிய நனந்தலைப் பெருங்காட்டு
ஞான்றுதோன் றவிர்சுடர் மான்றாற் பட்டெனக்


1. தொல். களவு, உ0. 2. தொல். களவு. உ௬.