பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

களிற்றியானை நிரை

௯௧


க௪-உ௫. நிற்படர்ந்து உள்ளி - நின்னை நினைந்து நினைந்து. அருஞ் செலவு ஆற்றா ஆரிடை - அரிது சென்ற அச் செலவும் இயலா தொழிந்த அரிய வழியில், ஞெரேரென - பொதுக்கென, பரந்து படு பாயல் - பரந்து கண்படும் பாயற்கண்ணே , நவ்வி பட்டென - பெண் மானைக் கண்டாலொத்த, இலங்கு வளை செறியா - விளங்குகின்ற வளை கழன்று விழுவதனை மேலே ஏற்றிச் செறித்து, இகுத்த நோக்கமொடு - தாழ்ந்த நோக்கத்துடனே, நிலம் கிளை நினைவினை நின்ற நிற்கண்டு - நிலத்தைக் காலாற் கீறும் வருத்த முடையையாய் நின்ற நின்னைக் (கனவிற்) கண்டு, இன் நகை - இனிய நகையினை யுடையாய்! இனையமாகவும் - யாம் இங்ஙனம் வருந்தியிருப்பவும், எம் வயின் ஊடல் யாங்கு வந்தன்று என - எம்மிடத்து நீ ஊடல் செய்தல் எங்ஙனம் வந்தது எனச் சொல்லி, நின் கோடு ஏந்து புருவ மொடு குவவு நுதல் நீவி - நினது பக்கம் உயர்ந்த புருவத்துடன் திரண்டு சிறுகிய நெற்றியினைத் துடைத்து, நறுங் கதுப்பு உளரிய நன்னர் அமையத்து - மணம் பொருந்திய கூந்தலைக் கோதிய நல்ல பொழுதிலே, வறுங்கை காட்டிய வாய் அல் கனவின் - வெறுங்கை யாக்கிய அப் பொய்க் கனவிடத்தே, ஏற்று ஏக்கற்ற உலமரல் - துயிலையேற்று நின்னைக் காணாது ஏக்கற்ற வருத்தத்தினை, போற்றாய் ஆகலின் - நீ அறிவிற் கொள்ளாயாகலின், புலத்தியால் எம்மே - எம்மைப் புலக்கின்றாய்.

(முடிபு) கள்படர் ஓதி எம் உள்ளியும் அறிதிரோவென, முறுவல் அழுங்க, நோய் முந்துறுத்து, நொதுமல் மொழியல். நின் ஆய் நலம் மறப்பனோ பெருங் காட்டு அவிர்சுடர் பட்டென, நிற்படர்ந்துள்ளி, செலவாற்றா ஆரிடைப் பாயல், நினைவினை நின்ற நிற்கண்டு இனையமாகவும் ஊடல் யாங்கு வந்தன்றென, நீவி, உளரிய அமையத்து, வாயல் கனவின் உலமரல் போற்றயாகலின் எம்மைப் புலத்தி.

(வி - ரை.) ஒழித்தது பழித்தல் - இரவலர்க்கு இடுதற்குப் பொருளின்றி அவரை அகற்றியதனைப் பழித்தல் என்றுமாம். ஆய் நலம் - ஆயத்தாரால் ஆராயப்படும் அழகு. மற்று, வினைமாற்று. ஞெலி - தீக்கடை கோல் : ஈண்டு மூங்கிலை ஞெலியென்றார். ஞெமல்-சருகு. பொத்தி - பொத்த. முளிபுல் - மூங்கிலுமாம். சுழற்றுறா - சுழற்றி; இதனைச் சுழற்ற எனத் திரிக்க. ஓடலின் அலறிய சாத்தொடு எனவும், சாத்தொடு ஞெரேரெனக் கண்படு பாயற் கண்ணே எனவும், நவ்வி பட்டென இகுத்த நோக்கமொடு எனவும் இயைக்க. ஞான்று தோன்று - தொங்குவது போலத் தோன்றும். மான்றால் : ஆல், அசை. கட்படர், கள் - வண்டு. ஞெரேரென - ஒலிக்குறிப்புமாம். பரத்தல் - வேண்டியபடி கிடத்தல். படுபாயல்-கண்படு பாயல். ஓதி, இன்னகை : விளிகள். என-என்று கூறி, யென ஒருசொல் வருவிக்க. யாழ இரண்டும் அசை. கனவிற் கண்டமையின் நன்னர் அமையம் ஆயிற்று. வறுங்கை காட்டுதல், கையில் ஒன்று உளது போலப் பிடித்துப் பின் வறுங்கை காட்டுதல் வழக்கு. ஈண்டுப் புணர்ச்சிபோல இருந்து பொய் படுத்திய கனவு. வாய் அல் - உண்மையல்லாத. ஏற்று - துயிலேற்று. துயிலேற்றமையின் கனவு பொய்யாயிற்று.