பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௯௨

அகநானூறு

[பாட்டு


(மே - ள்.) 1'கரணத்தி னமைந்து' என்னும் சூத்திரத்து, ‘சென்ற தேத்து உழப்புநனி விளக்கி, இன்றிச் சென்ற தந்நிலை கிளப்பினும் ' - என்னும் பகுதியில், இச் செய்யுளைக் காட்டி, இதனுள் 'வறுங்கை காட்டிய வாயல் கனவின்' என நனவின்றிச் சென்றவற்றைத் தலைவன் கூறியவாறு காண்க என்றார் நச்.

2'கனவு முரித்தா லவ்விடத் தான' என்னும் சூத்திரத்து, காமம் இடை யீடுபட்டுழித் தலைவனும் தலைவியும் கனாக் காண்டலும் உரித்து எனக் கூறித் தலைவன் கனாக் காண்டற்கு இச் செய்யுளை எடுத்துக் காட்டினர் இளம்.


 
40. நெய்தல்
 

[தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவழிக் கிழத்தி தோழிக்குச் சொல்லியது.]


கானல் மாலைக் கழிப்பூக் கூம்ப
நீனிறப் பெருங்கடல் பாடெழுந் தொலிப்ப
மீனார் குருகின் மென்பறைத் தொழுதி
குவையிரும் புன்னைக் குடம்பை சேர

௫) அசைவண் டார்க்கும் அல்குறு காலைத்
தாழை தளரத் 3தூங்கி மாலை
அழிதக வந்த கொண்டலொடு கழிபடர்க்
காமர் நெஞ்சம் கையறு பினையத்
துயரஞ் செய்து நம் அருளா ராயினும்

க0) அறாஅ லியரோ அவருடைக் கேண்மை .
அளியின் மையின் 4அவணுறை முனைஇ
வாரற்க தில்ல தோழி கழனி
வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்புந்
தண்ணுமை வெரீஇய தடந்தாள் நாரை

கரு) செறிமடை வயிரிற் பிளிற்றிப் பெண்ணை
அகமடற் சேக்குந் துறைவன்
இன்றுயின் மார்பிற் சென்றஎன் நெஞ்சே.

- குன்றியனார்.

(சொ - ள்.) கஉ. தோழி-,

க-௯. கானல் மாலைக் கழிப்பூக் கூம்ப - கடற்கரைச் சோலையை அடுத்த கழியில் வரிசையாகவுள்ள பூக்கள் குவியவும், நீல் நிறப் பெருங்கடல் பாடு எழுந்து ஒலிப்ப - நீல நிறத்தையுடைய பெரிய கடல் ஒலிமிக்கு ஒலிக்கவும் , மீன் ஆர் குருகின் மென்


1. தொல் - கற்பு. ரு. 2. தொல். பொருளியல். ௩. (பாடம்) 3. தூக்கி. 4. அவணுறைவு.