பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/105

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


90 - அகநானூறு - மணிமிடை பவளம்

(தலைவனின் பிரிவுபற்றிய செய்தியைத் தலைவியிடம் கூறி அவளுடைய இசைவைப் பெறல்வேண்டும் என்ற எண்ணத் தோடு சென்றாள் தோழி. ஆனால் அங்கோ, தனக்கு முன்னரே தலைவி அதனை உணர்ந்து வாடிக்கிடந்த நிலையினைக் கண்டாள். தலைவனிடம் வந்து அதனைக் கூறி அவன் போக்கை நிறுத்தச் செய்கின்றாள்.) *

வினை.வயிற் பிரிதல் யாவது?- ‘வணர்கரி வடியாப் பித்தை வன்கண், ஆடவர் அடியமை பகழி ஆர வாங்கி; வம்பலர்ச் செகுத்த அஞ்சுவரு கவலைப் படுமுடை நசைஇய வாழ்க்கைச் செஞ்செவி 5

எருவைச் சேவல் ஈண்டுகிளை பயிரும் வெருவரு கானம் நீந்தி, பொருள் புரிந்து இறப்ப எண்ணினர்’ என்பது சிறப்பக் கேட்டனள் கொல்லோ தானே? தோழ் தாழ்பு சுரும்பு உண ஒலிவரும் இரும்பல் கூந்தல், 10 அம்மா மேனி,ஆயிழைக் குறுமகள் சுணங்கு சூழ் ஆகத்து அணங்குஎன உருத்த நல்வரல் இளமுலை நனைய; பல்லிதழ் உண்கண் பரந்தன பணியே.

வளைந்து சுருண்டதும் கோதி ஒப்பனை செய்யப் பெறாதது மான மயிரினை உடைய, வன்கண்மையினை உடையவரான மறவர்கள், குதை அமைந்த அம்பினை முழுவதும் இழுத்துச் செலுத்தி, வழிச்செல்வாரான புதியவர்களைக் கொல்வார்கள். அப்படிக் கொன்றிருக்கும், அச்சந்தோன்றும் கவர்த்தநெறியிலே, மிகுந்த முடைநாற்றம் நாறும் புலாலையே விரும்பி வாழ்தலையுடையதும், சிவந்த செவிகளையுடையதுமான எருவைச் சேவலானது, அப்படி வீழ்ந்தவரைத் தின்னுவதற்காகத் தன்னுடைய நெருங்கிய சுற்றத்தைக் கூப்பிட்டுக்கொண்டிருக்கும். அச்சம் தோன்றும் அத்தகைய காட்டினைப் பொருள்மேல் கொண்ட விருப்பத்தால் கடந்துசெல்லவும் நீர் எண்ணினிiர் என்பதனை, அவள் எனக்கு முன்னரே கேட்டு விட்டனளோ?

வண்டுகள் மலரிதழ்களினுள்ளே புகுந்து தேனை உண்டு கொண்டிருக்கும் தழைத்த கருமையுடைய பலவாகிய கூந்தலையும், அழகிய மாமை நிறமுடைய மேனியினையும், ஆராய்ந்தணிந்த அணிகளையும் உடைய இளமைப் பருவத்தின ளான தலைவியின், திதலை படர்ந்துள்ள மார்பினிடத்தே, அணங்கு போல உருக்கொண்ட, நல்ல வளர்ச்சியினை