பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


iv

தேவன் என்பவனாவன், அவன், தொன்மையாகவே சிறப்புடைய நன்மையாளர் மலிந்த குடியினனு மாவன்.

நின்ற நீதி வென்ற நேமிப் பழுதில் கொள்கை வழுதியர் அவைக்கண் அறிவுவீற் றிருந்த செறிவுடை மனத்து வான்றோய் நல்லிசைச் சான்றோர் குழிஇ அருந்தமிழ் மூன்றுந் தெரிந்த காலை 5 ஆய்ந்த கொள்கைத் தீந்தமிழ்ப் பாட்டுள் நெடிய வாகி அடிநிமிர்ந் தொழுகிய இன்பப் பகுதி யின்பொருட் பாடல் நானு றெடுத்து நூல்நவில் புலவர் களித்த மும்மதக் களிற்றியா னைநிரை 10 மணியொடு மிடைந்த அணிகிளர் பவளம் மேவிய நித்திலக் கோவை என்றாங்கு அத்தகு பண்பின் முத்திறமாக முன்னினர் தொகுத்த நன்னெடுந் தொகைக்குக் கருத்தெனப் பண்பினோர் உரைத்ததை நாடின் 15

அவ்வகைக்கு அவைதாஞ் செய்விய அன்றி அரியவை யாகிய பொருண்மை நோக்கிக் கோட்ட மின்றிப் பாட்டொடு பொருந்தத் தகவொடு சிறந்த அகவல் நடையால் கருத்தினிது இயற்றி யோனே-பரித்தேர் 2O வளவர் காக்கும் வளநாட் டுள்ளும் நாடெனச் சிறந்த பீடுகெழு சிறப்பிற் கெடலருஞ் செல்வத்து இடையள நாட்டுத் தீதில் கொள்கை மூது ருள்ளும் ஊரெனச் சிறந்த சீர்கெழு மணக்குடிச் 25 செம்மை சான்ற தேவன் தொன்மை சான்ற நன்மை யோனே!

இத் தொகைக்குக் கருத்து அகவலாற் பாடினான், இடையள நாட்டு மணக்குடியான், பால்வண்ண தேவனான வில்வ தரையன். - -

இத்தொகைப்பாட்டிற்கு அடியளவு சிறுமை பதின் மூன்று: பெருமை முப்பத்தொன்று. தொகுப்பித்தான் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி. தொகுத்தான் மதுரை உப்பூரிகுடிகிழான் மகனாவான் உருத்திர சன்மன் என்பான்.