பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/111

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


96 அகநானூறு - மணிமிடை பவளம்

“எவன்கொல் மற்று.அவர் நிலை?” என மயங்கி, இகுபனி உறைக்குங் கண்ணொடு இனைபு ஆங்கு இன்னாது உறைவி தொன்னலம் பெறுஉம் 10

இதுநற் காலம்; கண்டிசின்-பகைவர்

மதின்முகம் முருக்கிய தொடிசிதை மருப்பின், கந்துகால் ஒசிக்கும் யானை, - - வெஞ்சின வேந்தன் வினைவிடப் பெறினே!

தன்னுடைய கதிர்களையே கையாகக் கொண்டு, ஞாயிறானது எங்கும் உள்ள ஈரப்பசையினை எல்லாம் கவர்ந்து பசுமையற்றுப் போகும் படியாகக் காய்ந்தது. அதனால், வளம் ஒழிந்து, தம்முடைய பழைய அழகும் மாறுபட்டுப் போய், மிகுந்த அகற்சியுடைய இந்த உலகத்து இடம் எங்கும் வெடிப் புக்களே மிகுந்தன. அப்படியாகிப்போன காடு தன் பழைய நிலைமையினை எய்துமாறு மிகுதியான பெயலை மேகங்கள் பொழிந்தன. அதனால் புள்ளிகளையும் வரிகளையும் உடைய வண்டினங்கள் ஆர்ப்பரிக்க, நறுமணமுடைய முல்லை மலர்களோடு செங்காந்தள் மலர்களும் வேறு பலப்பல பூக்களுடன் மலர்ந்தன. காடும் மலர்மணம் கமழ்கின்ற நறுநாற்றத்தினைப் பெற்றுவிட்டது.

பகைவர்களது கோட்டைகளின் கதவுகளை மோதிச் சிதைத்ததனால் பூண்சிதைந்த கொம்புகளை உடையனவாயும் கட்டுத்தறியினை ஒடிக்கும் கால்களோடு சினம் உள்ளனவாயும் விளங்கும் யானைப்படையினை யுடையவன், வெம்மையான சினத்தினையுடையவனாக வந்து முற்றியிருப்பவனான நம் வேந்தன். அவனுடைய தொழில் ஒருவாறு முற்றுப் பெற்ற தானால் -

காட்டின் கவினைக்கண்டு.உள்ளம் நொந்து, “அவனுடைய நிலைமை என்னவோ?’ என்று மயங்கி ஒழுகும் கண்ணிரானது மார்பிலே வடிந்து கொண்டிருக்கும் கண்களுடன். அவ்விடத்து நம் மனையினிடத்தே வருந்திவருந்தி இன்னாமையுடன் இருப்பவளான நம் தலைவியும், நம்முடன் இணைந்து தன் பழைய அழகினையெல்லாம் பெறுகின்ற நல்ல காலமும் இதுவாகும் என்பதனைக் காண்பாயாக.

என்று, பாசறைக் கண்ணிருந்த தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொன்னான் என்க.

சொற்பொருள்: 1. வாங்கி - கவர்ந்து. 2 பைதற பசுமை அற்றுப் போகுமாறு. தெறுதலின் - காய்தலின். 3. விடுவாய்ப் பட்ட - பிளந்துபட்ட கண் - இடம். மாநிலம் - உலகம். 4. எதிர -