பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/113

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


98 அகநானூறு - மணிமிடை பவளம்

தாழிக் குவளை வாடுமலர் சூட்டித், ‘தருமணற் கிடந்த பாவைஎன் அருமக ளே என முயங்கினள் அழுமே!

‘பெரிய தலையினையுடைய இளைய பிடியானது குழியிலே அகப்பட்டுக் கொண்டதாகத் தன் களிற்றை அழைக்குமாறு கூப்பீடுசெய்த பேரொலிக்கு அஞ்சி, ஒய்யென எழுந்த சிவந்த வாயினையுடைய அதன் கன்றானது, தாதாகிய எருவினைக் கொண்ட தெருக்களையுடைய பழைய ஊராகிய அவ்விடத்தே, எருமையாகிய நல்ல மாட்டினின்றும் பெறுகின்ற முலைப் பாலினை உண்டுகொண்டிருக்கும். அப்படிப்பட்ட இடங்க ளாகிய நாடுகள் பலவற்றையும் கடந்து சென்றனள் நன்ை உடையவளான தலைவி. அவள் பொருட்டாக, -

- அவளுடன் பிரியாதிருந்த ஆயமும் தன் பொலிவை யெல்லாம் இழந்து போனதாகப் பெரிதும் வருந்திக் கொண்டிருக்கின்றது; -

‘என் உயிர் கெட்டழிவதாக என்று மனம்நொந்து கூறியவளாக, வீட்டிற் கொணர்ந்து பரப்பியிருந்த மணலிலே கிடந்த தன் மகளது பாவையினை எடுத்து, அதன் கண்களையும் நெற்றியையும் தடவிவிட்டு, வளைந்த நிலையினதான நொச்சியின் வரிப்பட்டுப்போன நிழலிலே தண்ணென்று கிடத்தித், தாழிக்கண் மலர்ந்த குவளையினது வாடிய மலரை அதற்குச் சூட்டித், தாயானவளும் ‘என் அருமை மகளே! நின் இனிய தோளினைத் தருவாயாக!’ என்று சொல்லி, அதனைத் தன் மார்போடு அணைத்தவளாக அழுது கொண்டிருப்பாள்; என்று, மகட்போக்கிய தாயது நிலைமையைக் கண்டவர் சொன்னார்கள் என்க.

சொற்பொருள்:1.கயந்தலை-பெரிய தலை, பயம்பு-பள்ளம். 2. விளிப்படுத்த கூப்பிட்டுக் கதறிய, கம்பலை - ஆரவாரம். 3. குழவி - யானைக் கன்று. 5. பெறுமுலை - பால் பெறும் முலையும் ஆம், 8. இlஇயர் - அழிவதாக. 10. தடவு நிலை - வளைந்த நிலை; அன்றி எட்டுத் தடவும் அளவு தாழ்ந்த நிலையுமாம். அசைஇ கிடத்தி, ஊசலில் கிடத்தி ஆட்டியுமாம்.

மேற்கோள்: இல்நீங்கிச் சென்னளேனும், ஆயமும் தாயும் பேதுறச் செய்தனளேனும், அத்தலைவியின் செயல் அறத்தோடு பட்டதாதலால், அவளை நன்னராட்டி’ எனச் சொல்லினர். பிடி பயம்பிற் சிக்கி அலமருவதுபோலத், தாய் துயரிற்சிக்கித் தந்தையைக் கூப்பீடு செய்ய, அதற்கு அஞ்சியவள் வழியிடை ஊரார் ஊட்டக் கவலையின்றித் தன் தலைவனுடன் சென்றனள் 6.