பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/115

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


100. - அகநானூறு - மணிமிடை பவளம்

நல்ல மரங்கள் குழுமியிருக்கும் இடத்திலேயுள்ள, பல நாளும் வடிக்கப்பெற்ற புளித்த கள்ளுள்ள சாடியைக், கள் விற்பார் முகக்கும்போது, அந்த முகக்கும் கலம்பட்டு அந்தச் சாடியானது உடைந்து போயினால், விரவிய மழைத்துளிகள் போலத் தெருவெல்லாம் கள்ளின் துளிகள் துளிக்கும், கள்வளம் உடையது, பழைமையான பலவகை நெல்வளமும் கொண்ட வேளுர், அதன் வாயிலிடத்தே,

நறுமணநீர் தெளித்த, நறுநாற்றமுடைய பூங்கொத்துக் களால் ஆகிய மாலையைப், பொறிகளையும் வரிகளையும் உடைய வண்டினங்கள் ஊதாது போய்விடுவதற்கு ஏதுவான உயர்ந்த பலிக்கடன்களைப் பெறுகின்ற அச்சந்தரும் தெய்வம் உள்ளதன்றோ!

புனைதற்றொழிலோடு அமைந்த கரிய கூந்தலினை உடையவளான நின்னால் ஐயுறப் பெற்றவளான பரத்தையுடன், யான் அப்படியெல்லாம் செய்து வந்தவனானால், அந்தத் தெய்வமே என்னை வருத்துவதாக என்று கூறித், தன் மனைவியைத் தேற்றுகின்ற கணவன் இவன் ஆயினான்! அங்ஙனமானால் -

நேற்றுக் கரையுச்சிகளைத் தொட்டபடியாக வந்து கொண்டிருந்த காவிரியின் மிகுதியான புதுவெள்ளப் பெருக்கிலே, தாரணிந்த களிற்றினைப்போலப் புணையின் தலைப்பகுதியைத் தழுவியிருந்து, கூட்டத்திற்குரிய பெரிய அணிகளோடு பொலிவுற்று, நம்முடன் புனலாடியவர்தான் வேறு யாவரோ? என்று, தலைமகன் தலைவியிடம் பொய்ச்சூளுற்றான் எனக் கேட்டபரத்தை, தன் பாங்காயினார் கேட்பச் சொன்னாள் என்க.

சொற்பொருள்: 12, ‘நன்மரங் குழிஇய பல்நாள் அரித்து முதிர் நனைசாடி’ எனக் கூட்டி, நல்ல மரங்களிலேயிருந்து சேமித்ததும், பலநாள் அரித்தரித்து வடிகட்டியதுமான பழைய புளித்த கள் நிறைந்த சாடி எனவும் பொருள்கொள்க. 2. கோஒய் - கள் விற்கும் கலயம். 3. மயங்குமழைத்துவலை விரவிய மழைத் துளிகள். 5. நறுவிரை - நறுமணஞ்சேர்ந்த நீர். 6. வண்டுகள் தெய்வக் குற்றத்துக்கு அஞ்சி ஊதாது கழியும் என்க. 7 உருகெழு - அச்சந்தருகின்ற 8.கடுத்தோள் - ஐயுறப் பெற்றவள்.9. அணங்குக - வருத்துக. தலைப்புணை - தெப்பத்தின் தலைப்பகுதி.15. கோடுகரையுச்சி, கரைமரங்களின் கிளைகளும் ஆம் மலிர் நிறை - மிக்க வெள்ளம். -