பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/116

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மேற்கோள்: இல்லோர் செய்வினை இகழ்ச்சிக் கண்ணும்’ என்னும் பகுதிக்கு, இதனைக்காட்டி இஃது, இளையோர் கூற்று’ எனப்,"புல்லுதல் மயக்கும் என்னும் சூத்திர உரையினும், பரத்தை பிறர் அலர் கூறியவழிக் காமஞ் சிறந்து புலந்தவாறு காண்க எனக், கோடுதோம் மலிர்நிறை ஆடியோரே என்ற அடியினைக் காட்டிக், கிழவோன்'விளையாட்டாங்கும் அற்றே என்னுஞ் சூத்திர உரையினும், நச்சினார்க்கினியர் உரைத்தனர்.

பாடபேதங்கள்: 8. நி வெய்யோள் வயின் 15. தோடு தோய் மலிர் நிறை.

167. பொருந்தாக் கண்ணேம்!

பாடியவர்: கடியலூர் உருத்திரங்கண்ணனார். திணை: பாலை துறை: தலைமகன் பொருள்டைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது.

(வாணிகச் சாத்துடன் தன்னொத்த இளைஞர் பலரும் பொருள் தேடிவரச் செல்லுதலைக் கண்ட ஒரு தலைவனின் உள்ளத்திலும் அந்த ஆர்வம் தலைதூக்கியது. ஆனால், அதே சமயம், தன் காதலியைப் பிரியவேண்டுமே என்ற துயரமும் உள்ளத்திலே முனைத்து எழுகின்றது. அவன் இப்படித் தன் நெஞ்சிற்குச் சொல்லியவனாகப் போவதையே அப்போதைக்கு நிறுத்திவடுகிறான்.)

வயங்குமணி பொருத வகையமை வனப்பின் பசுங்காழ் அல்குல் மாஅயோ ளொடு வினைவனப்பு எய்திய புனைபூஞ் சேக்கை, விண்பொரு நெடுநகர்த் தங்கி, இன்றே இனிதுடன் கழிந்தன்று மன்னே, நாளைப் 5

பொருந்தாக் கண்ணேம் புலம்வந்து உறுதரச் சேக்குவம் கொல்லோ, நெஞ்சே! சாத்துஎறிந்து அதர்கூட் டுண்ணும் அணங்குடைப் பகழிக் கொடுவில் ஆடவர் படுபகை வெரீஇ ஊர்எழுந்து உலறிய பீர்எழு முதுபாழ், 10

முருங்கை மேய்ந்த பெருங்கை யானை வெரிந்ஓங்கு சிறுபுறம் உரிஞ ஒல்கி - இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென, மணிப்புறாத் துறந்த மரம்சோர் மாடத்து எழுதுஅணி கடவுள் போகலின், புல்லென்று 15