பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/121

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


106 அகநானூறு - மணிமிடை பவளம்

169. அவள் வருந்துவாளே!

பாடியவர்: தொண்டி ஆமூர்ச் சாத்தனார். திணை: பாலை துறை: தலைமகன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. o

(பொருள் வேட்கையால் தன்னுடைய காதல்மனைவியைப் பிரிந்து சென்றான் ஒருவன். பலப்பல சுரநெறி வழிகளையும் கடந்தான். ஒருநர்ள மாலைவேளையிலே இடைவழியில் தன் காதலியை நினைத்துக்கொள்ளுகிறான்.தன்னைப் பிரிந்து அவள் வருந்தியிருக்கும் நிலைமை அவன் மனக்கண்ணில் தோன்றுகிறது. தன் நெஞ்சிற்கு இப்படிச் சொல்லுகிறான்)

மரம்தலை கரிந்து நிலம்பயம் வாட, அலங்குகதிர் வேய்ந்த அழல்திகழ் புனந்தலைப், புலிதொலைத்து உண்ட பெருங்களிற்று ஒழிஊன் கலிகெழு மறவர் காழ்க்கோத்து ஒழிந்ததை, - ஞெலிகோற் சிறுதீ மாடடி, ஒலிதிரைக் 5

கடல்விளை அமிழ்தின் கணஞ்சால் உமணர் சுனைகொள் தீநீர்ச் சோற்றுஉலைக் கூட்டும் சுரம்பல கடந்த நம்வயின் படர்ந்து, நனி பசலை பாய்ந்த மேனியள், நெடிதுநினைந்து, செல்கதிர் மழுகிய புலம்புகொள் மாலை 10

மெல்விரல் சேர்த்திய நுதலள், மல்கிக் கயலுமிழ் நீரின் கண்பனி வாரப் பெருந்தோள் நெகிழ்ந்த செல்லலொடு வருந்துமால், அளியள் திருந்திழை தானே! மரங்கள் தம் உச்சிகள் கரிந்துபோகவும், நிலம் தன்வளம் குன்றவும், உலகைச் சுற்றிவருகின்ற் ஞாயிற்றுக் கதிர்கள் மூட்டமிட்டிருக்கும் வெம்மை திகழ்கின்றதாக விளங்குவது அகன்ற பாலைநிலம். அதனகண், புலியானது கொன்று உண்டபின் கைவிட்டுப்போன் பெரிய களிற்றினது எஞ்சிய ஊனை, ஆரவாரமுடைய மறவர்கள், கோலிலே கோத்து எடுத்துக் கொண்டு செல்வார்கள். அதன்பின் மிகுந்திருப்பதை, ஒலிக்கும் அலைபொருந்திய கடலிலே விளைகின்ற, அமிழ்தான உப்பினைக் கொணரும் உமணர்களின் கூட்டமானது, தீக்கடை கோலாலாகிய சிறுதீயாலே வாட்டிச், சுனையிலிருந்துகொண்ட இனிய நீரினால் அமைந்த தம்முடைய சோற்று உலையிலே, அந்த வாட்டிய தலையினையும் கூட்டிச் சமைத்து உண்பார்கள்.