பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/125

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


110 அகநானூறு - மணிமிடை பவளம்

நினைவல் மாதுஅவர் பண்பு’ என்று ஒவாது இனையல்-வாழி, தோழி! புணர்வர்- 5

இலங்குகோல் ஆய்தொடி நெகிழப், பொருள்புரிந்து அலந்தலை ஞெமையத்து அதர்அடைந் திருந்த மால்வரைச் சீறுர் மருள்பன் மாக்கள் கோள்வல் ஏற்றை ஓசை ஓர்மார், திருந்திக் கொண்ட அம்பினர், நோன்சிலை 1 O

எருத்தத்து இரீஇ, இடந்தொறும் படர்தலின், கீழ்ப்படு தாரம் உண்ணா, மேற்சினைப் பழம்போற் சேற்ற தீம்புழல் உணிஇய, கருங்கோட்டு இருப்பை ஊரும் பெருங்கை எண்கின் சுரன்இறந் தோரே! 15

தோழி! நீ வாழ்வாயாக!

பெரிய மலையடிவாரத்திலேயுள்ள சிறியதான ஊரிலே, வாடிய உச்சியை உடைய ஞெமை மரங்கள் அடர்ந்திருக்கும் வழிகளிலே, மருட்சிகொண்ட மக்கள் பலரும், கொல்லுதலிலே வல்ல கரடியேற்று வருகின்ற ஒலியினை உணர்பவராகத், திருத்திக் கொண்ட அம்புகளையுடையவராகவும், வலிய வில்லைத் தோளிலே கொண்டவராகவும், இடமெங்கும் பரவி வந்து கொண்டிருப்பார்கள். அதனால், பெரிய கையினை யுடையவான கரடிகள், தரையிலே கிடப்பதான உணவுகளை எல்லாம் உண்ணாதனவாய், மரங்களின் மேலேயுள்ள கிளைகளிலே பழம்போல் இருக்கும், இனிய துளையினை யுடையவான பூக்களை உண்பதற்காகக், கரிய கொம்புகளை யுடைய இருப்பை மரத்தின் மேலே ஏறி இருக்கும். அத்தகைய சுரநெறியினைக் கடந்து, பொருள் ஈட்டிவருவதனை எண்ணிச்

சென்றுள்ளவர் நம் தலைவர்.

“விளங்கும் கோற்றொழிலினையுடைய அழகிய நின் தொடிகள் கழன்று வீழ்ந்தன. நெற்றியும் நுண்ணிய பசலைப் புள்ளிகள் படரப்பெற்றதாயுள்ளது. தோள்களும், அகன்ற மலையினிடத்துக் காட்டிலே, ஆராய்ந்து அறுத்த மூங்கில் துண்டைப் போன்ற தன் பழைய எழில் அழிந்துபோய் வாட்டமுற்றன. இதனால், அவருடைய அருட்பண்பினை நாடோறும் யான் நினைவேன்” என்று நீ சொல்லி, ஒயாதே வருந்தாதிருப்பாயாக அவர் விரைந்து வந்து விடுவார்.”

என்று, தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீ இயினாள் என்க.