பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/127

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


112 அகநானூறு - மணிமிடை பவளம்

இம்மென்னும் ஒசையுடன், மலைக்குகைகளும் பிளப்பிடங்களும் எதிரொலிக்க, அவை ஒலியோடும் வீழ்ந்துகொண்டிருக்கும். அத்தகையதும், மூங்கில்கள் நெருக்கமாக வளர்ந்திருப்பதுமான உயர்ந்த மலைச்சாரலிலே -

இரும்பினாலே வடித்துச் செய்தமைத்தாற்போல விளங்கும், கருமையான வலிய கையினை உடைய கானவன், விரிந்த மலர்களை உடைய கடப்பமரத்தின்மேல் இருந்து, புள்ளிகள் பொருந்திய நெற்றியினையுடைய களிற்றினது அரியமார்பிலே அம்பினைத் தெரிந்து எடுத்துத் தொடுத்து எய்வான். பகையினை வெல்லும் வலியுடைய அக்களிற்றை வீழ்த்தி, அதன் வெண் கொம்பினைக் கொண்டுவந்து, தன்னுடைய புல்வேய்ந்துள்ள குடிசையிலே, அதன் புலால் நாற்றம் காயுமாறு ஒருபுறம் ஊன்றியும் வைப்பான். அதன்பின், அந்தக் குடிசையின் முற்றத்திலே நிற்கும் பலாவினது முழவுபோலும் பருத்த கனியி னின்றும் பிழிந்த மதுவினை உண்டு களிப்பான். அந்தக் களிப்பி னால்தன் உறவு முறையாரோடும், ஆரவாரம் மிகுந்தவனாகக் கூடியிருந்து உண்பான். அத்தகைய குன்றுகளையுடைய நாடனே!

நீ அவள்பால் அன்பில்லாதிருத்தலை யான் முன்பே அறியேன். அதனை அறிந்திருந்தேனாயின், அழகிய அணிகலன் களையும், அழகிய இதழ்களையுடைய மையுண்ட கண்களையும் உடைய, இளையவளர்கிய தலைவியின் மணிபோலும் சிறந்த அழகெல்லாம் கெடுமாறு, பொன்னொத்த பசலையைானது அவள் மேனியில் இன்று படர்வதும் இல்லையாய் இருந்திருந்திருக்குமே!

சொற்பொருள்: 1. உரறும் முழங்கும். நீர் நீர்மையுமாம். சிலம்பு - மலைச்சாரல் 2. பிரசம் - தேன். 3. இமிழ் - ஒலித்தலையுடைய..கடுப்ப-போல.3.காம்பு-மூங்கில். 6. கருங்கை - வலிமையான கை, 8. நிறம் - மார்பு, 9. இகல் - பகை முன்பு - வலிமை. 12. பிழி.மகிழ் - பிழிந்த கள்ளுண்டு மகிழும். 3. சாந்த ஞெகிழி - சந்தன விறகுத் தீ, 17 மணி - ஒளியுடைய மணிகள். 18. பாவின்று - பரந்தது.

உள்ளுறை: ‘பிரசமொடு விரைஇய அருவியானது விடரகம் சிலம்ப விழும் என்றது, தலைவியுடன் தலைவன் கூடி இன்பத்திலே திளைக்கும் களவு ஒழுக்கம்பற்றிய செய்தி, அம்பற்பெண்டிர் வாயெல்லாம் அலராக எதிரொலிப்பதாயிற்று என்பதைக் குறிக்கவாம். -

கானவன் மறைந்திருந்து யானையை வென்றானாயினும், பின் அதன் கோட்டைத் தன் குரம்பையில் பலரும் அறியச்