பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/134

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூலமும் உரையும் புலியூர்க்கேசிகன் 119

என்று, பிரிவின்கண் வற்புறுக்குந் தோழிக்குத் தலைமகள் சொன்னாள் என்க. - - சொற்பொருள்: 1. வீங்குதல் - பூரித்தல். விளிம்பு - ஒரம். உரீஇய-உரசிய நோன்சிலை-வலிமையுடைய வில்.2 வாங்குதல் - இழுத்தல். தொடை - தொடுத்தல 3. விளிக்கும் ஒலிசெய்யும். வெவ்வாய் வாளி - உயிர் போக்குதலினால், வெவ்விய முனையை உடைய அம்பு என்பர். 5. பாறு - பருந்து. 6. உணர தெளிவாக அறிய 10. கால்இயல் - காற்றுப்போல விரைந்து செல்லும், 12. பல்லூழ் மின்னி பன்முறையும் மின்னலிட்டு.16. தேஎம் - தேசம்; வானகம். குலைஇ - வளைத்து.17. பயம் - பயன். பாஅய் - பரவி.18. எழிலி - மேகம். தாழ்தல் - காலிட்டுப் பெய்தல்.

விளக்கம்: போரிலே வென்று, வெற்றிக் களிப்பிலே திளைத்த பாண்டியனின் படைவீரர் செயலைக் கூறினாள், தன் தலைவனும் தன் வினைமுடித்த பின்னருங்கூட விரைந்து மீண்டுவராமைபற்றிய வருத்தத்தினால், தன்னை முன் தெளிவித்த சூளும் பொய்த்தான்; வருவேன் என்ற காலமும் பொய்த்தான் பொருள் விருப்பினாலே தன்னுடைய பிரிவினால் தன் காதலிக்கு நேர்கின்ற வேதனையையும் மறந்தான்; கொடிய பாலையையும் கடக்கத் துணிந்தான் என்பனவெல்லாம், அவள் உள்ளத்துப் புலப்பத்தை விளக்கும் சொற்கள் ஆம். ‘முன்கை உள்ளத்துப் புலப்பத்தை விளக்கும் சொற்கள் ஆம். ‘முன்கை பற்றிச்சூள் உரைத்தல்’ என்பது, கையடித்துச்சத்தியம் செய்தல்’ என இந்நாளினும் வழக்காற்றில் உள்ள மரபாகும்.

பாடபேதம்: 14, நிரைத்த, நிரைந்த,

176. என்ன கடமையோ?

பாடியவர்: மருதம் பாடிய இளங்கடுங்கோ திணை: மருதம் துறை: தோழி, தலைமகனை வாயின் மறுத்தது.

(தன் மனைவியை மறந்து, பரத்தையர் உறவிலே களித் திருந்தான் ஒரு தலைவன். அதனால், அவனுடைய செயலைப் பற்றிக் கூறி, ஊரவர் பழித்துப்பேசத் தொடங்கினர். அதற்கு அஞ்சிய அவனும், தன் வீடுநோக்கிவருகின்றான்.ஊடியிருந்ததன் மனைவியின் உறவைப் பெறுவதற்குத் தோழியின் உதவியை நாடுகின்றான். அப்போது அவள் மறுத்துக்கூறியது இது)

கடல்கண் டன்ன கண் அகன் பரப்பின் | நிலம்பக வீழ்ந்த வேர்முதிர் கிழங்கின் கழைகண் டன்ன தூம்புடைத் திரள்கால், களிற்றுச்செவி அன்ன பாசடை மருங்கில், கழுநிவந் தன்ன கொழுமுகை இடைஇடை 5