பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/140

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மூலமும் உரையும்
புலியூர்க்கேசிகன் * 125
 

        வயிரத்தன்ன வைரந்து மருப்பின்,
        வெதிர்வேர் அன்ன பரூருஉமயிர்ப் பன்றி
        பறைக்கண் அன்ன நிறைச்சுனை பருகி,
        நீலத் தன்ன அகல்இலைச் சேம்பின்
        பிண்டம் அன்ன கொழுங்கிழங்கு மாந்தி, 5

        பிடிமடிந் தன்ன கல்மிசை ஊழ் இழிபு,
        யாறுசேர்ந் தன்ன ஊறுநீர்ப் படாஅர்ப்
        பைம்புதல் நளிசினைக் இருகுஇருந் தன்ன,
        வண்பிணி அவிழ்ந்த வெண்கூ தாளத்து
        அலங்குகுலை அலரி தீண்டித், தாது உக, 10

        பொன்உரை கட்டளை கடுப்பக் காண்வரக்,
        கிளைஅமல் சிறுதினை விளைகுரல் மேய்ந்து
        கண்இனிது படுக்கும் நன்மலை நாடனொடு
        உணர்ந்தனை புணர்ந்த நீயும், நின்தோட்
        பணைக்கவின் அழியாது துணைப்புணர்ந்து, என்றும், 15

        தவல்இல் உலகத்து உறைஇயரோ-தோழி-
        எல்லையும் இரவும் என்னாது, கல்லெனக்
        கொண்டல் வான்மழை பொழிந்த வைகறைத்
        தண்பனி அற்சிரம் தமியோர்க்கு அரிது’ எனக்,
        கனவிலும் பிரிவு அறியலனே; அதன்தலை 2O

        முன்தான் கண்ட ஞான்றினும்
        பின்பெரிது அளிக்கும், தன் பண்பினானே.

தோழி! வயிரத்தைப்போல ஒளியுடன் விளங்குவதாய் மேல்நோக்கி எழுந்திருக்கும் கூர்மையான கொம்புகளையும், மூங்கில் வேரினைப் போன்ற பருத்த மயிரினையும் உடையது காட்டுப் பன்றி, பறவையின் கண்போலத் தோன்றும் நீர் நிறைந்த சுனையிலே அந்தப் பன்றி நீர் அருந்தும்; நிலத்தைப் போன்ற அகன்ற இலையினையுடைய சேம்பினது, பிண்டித்து வைத்தாற் போல விளங்கும் கொழுமையான கிழங்குகளை நிறையக் கிளைத்துத் தின்னும். பிடியானை கிடந்து உறங்குவது போல விளங்கும் பாறையினின்றும், முறையாகக் கீழே இறங்கிவரும் யாற்றினை அணுகவிருப்பது போன்ற நீர் ஊற்றான இடத்திலேயுள்ள, சிறுதுாறாகிய பசிய புதரிலேயுள்ள செறிந்த மரக்கிளைகளிலே, வெண்மையான நாரையானது இருந்தாற் போல விளங்கும், வெண்மையான அசையும் கொத்துக்களிலேயுள்ள, வளமையான இதழ் விரிந்த மலரினைச் சேர்ந்து, அம்மலர்களினின்றும் பூந்தாதுகள் தன்மேல் உதிர, அதனால் பொன்னுரைத்து மாற்றறியுங் கட்டளைக் கல்லினைப்போல