பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/145

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


130 அகநானூறு - மணிமிடை பவளம்

தோழி! இது மிகவும் நகைப்பைத் தருவதாகும்.

என்று.இரந்த பின்னிற் தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி தலைமகளைக் குறைநயப்பக் கூறினாள் என்க.

சொற்பொருள்: 1. தகை - தகைமை. தகைதலும் ஆம். 2. கோதை ஆயம் - கோதை சூடிய ஆயமகளிர். குவவுமணல் உயர்ந்துள்ள மணல்; மணல் மேடு, 3. வண்டல் அயர்தல் - நெய்தல் மகளிர் விளையாட்டு வகையுள் ஒன்று. 4. கடைஇ - செலுத்தி, 5. அமன்ற - நெருங்கிய. 7. கொன்னே வீணே; அவள் விரும்பாதே சூட்டியதால் வீணே சூட்டியதாயிற்று. 8. நல்வரல் - நல்ல வளர்ச்சியை உடைய, முகிழ்த்து வளர்ந்து வருதலால் ‘வரல் ஆயிற்று. இளமுலை - இளைய முலை; பருவம் குறித்தது. 10. இருங்கழி பெரிய கழி, கரிய கழியும் ஆம் துழைஇ துழாவி. 1. இறை கொள் - தங்கியிருத்தல்.12, ஞாழல் - புலிநகக்கொன்றை. 13. படப்பை - தோட்டம்.15. அழுங்கல் - ஆரவாரம்.

விளக்கம்: அவள் மேனியிற் படர்ந்த பசலையினை நோக்கிய ஊரவர். அவளுடைய களவு உறவுபற்றி அலர் உரைக்கத் தொடங்கினர். அதனைத் தாழை மணந்து, ஞாழலொடு கெழி இ, புன்னை நுண்தாது நோக்கி, என்னையும் நோக்கி’ என உரைத்தமை நயம் உடையதாகும். தோழி கூற்றாகக் கொள்ளும்போது, படைத்து மொழிதலாகவும், தலைவி கூற்றாகக் கொள்ளும்போது தன் மேனி பசந்ததையும் ஊரலர் எழுதலையும் உரைத்து உரைவுவேட்டலாகவும் கொள்க.

பாடபேதம்: பாடியவர்: கருவூர்க் கண்ணம்பாணனார்; கண்ணன் பரணனார்.

181. என் நிலைமை உரைப்பாய்!

பாடியவர்: பரணர் திணை : பாலை துறை: இடைச்சுரத்து ஒழியக் கருதிய நெஞ்சிற்குச் சொல்லியது. சிறப்பு: மிஞலியோடு பொருது களத்திலே வீழ்ந்த ஆய் எயினனின் சிறப்பும்; புகார்நாட்டுப் பெருமையும்.

(பொருளார்வம் மேலிடத், தன் ஆருயிர் மனைவியைப் பிரிந்து, கானம் பல கடந்து சென்று கொண்டிருந்தான் ஒருவன். இடைவழியிலே, அவனுடைய மனமானது தன் காதலியின் நினைவால் பெரிதும் பேதுற, அவன் தன் நெஞ்சிற்கு இப்படிக் கூறுகின்றான்.)

துன்அருங் கானமும் துணிதல் ஆற்றாய், பின்நின்று பெயரச் சூழ்ந்தனை ஆயின்,