பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/146

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூலமும் உரையும் புலியூர்க்கேசிகன் 131

என்நிலை உரைமோ-நெஞ்சே!-ஒன்னார் ஒம்பரண் கடந்த வீங்குபெருந் தானை அடுபேர் மிஞ்லி செருவேல் கடைஇ, 5

முருகுறழ் முன்பொடு பொருதுகளம் சிவப்ப, ஆஅய் எயினன் வீழ்ந்தென, ஞாயிற்று ஒண்கதிர் உருப்பம் புதைய ஒராங்கு வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந்தோடு விசும்பிடை தூரஆடி, மொசிந்து உடன், 10 பூவிரி அகன்துறைக் கனைவிசைக் கடுநீர்க் காவிரிப் பேர்யாற்று அயிர்கொண்டு ஈண்டி, எக்கர் இட்ட குப்பை வெண்மணல் வைப்பின் யாணர் வளம்கெழு வேந்தர் ஞாலம் நாறும் நலம்கெழு நல்இசை, 15 நான்மறை முதுநூல் முக்கட் செல்வன், ஆல முற்றம் கவின்பெறத் தைஇய பொய்கை சூழ்ந்த பொழில்மனை மகளிர் கைசெய் பாவைத் துறைக்கண் இறுக்கும் மகர நெற்றி வான்தோய் புரிசைச் 20

சிகரம் தோன்றாச் சேண்உயர் நல்இல் புகாஅர் நல்நட் டதுவே-பகாஅர் பண்டம் நாறும் வண்டுஅடர் ஐம்பால், பணைத்தகைத் தடைஇய காண்புஇன் மென்தோள், அணங்குசால், அரிவை இருந்த 25

மணம்கமழ் மறுகின் மணற்பெருங் குன்றே.

மணப்பொருள்களை விலைகூறி விற்பவரது பண்டங்களின் மணம் கமழுகின்ற, வண்டுகள் மொய்க்கும் ஐம்பகுதியாகிய கூந்தலினை உடையவள், மூங்கிலின் தகைமையினைக் கொண்ட தாக, வளைந்த, காட்சிக்கு இனிதான மென்மையான தோளினை உடையவள்; அழகிலே மிகுந்தவளான நம் தலைவி. அவள் இருந்த, மணம் கமழுகின்ற தெருக்களையுடைய பெரிய மணல் மேடாகிய குன்றமானது

ஆஅய் எயினன் என்பவன், முருகனைப்போன்ற வலிமையுடனே பகைவர் பாதுகாத்து நிற்கும் கோட்டைகளை வென்ற வெற்றிச் சிறப்பினையுடைய பெரிய படைகளை யுடைவனும், அடுதல் தொழிலிலே வல்லவனுமான மிஞலி என்பவனோடு செய்த போரின்கண், அக்களமெல்லாம் குருதியால் சிவப்பு நிறம் அடையுமாறு கடுமையாகப் போரிட்டு, முடிவிலே தானும் தோற்று மடிந்தனன்.