பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/147

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


132 அகநானூறு - மணிமிடை பவளம்

ஞாயிற்றினது ஒண்மையான கதிர்களின் வெம்மையானது அவன் உடலிலே படாது மறையுமாறு, ஒரு பெற்றியே, புதிய பறவைகளின் ஆரவாரம் பொருந்திய பெருந்திரளானது, வானத்திடையே வட்டமிட்டு உயரே நிழலிட்டுப் பறந்தன. பின், அவை ஒருங்கே கூடிப், -

பூக்கள் விரிந்த அகன்ற துறையினையுடைய காவிரியாகிய பேராற்றினது, மிக வேகத்துடன் வரும் வெள்ளமானது நுண் மணலைக் கொண்டுவந்து சேர்த்து மேடாக்கிய வெண்மையான மணற்குவியல்களையும், புது வருவாயினையுடைய ஊர்களையும் உடைய, வலிமையால் மிக்க சோழ மன்னர்களால் காக்கப்படும், உலகம் எல்லாம் புகழ்மணம் பரவிய, நன்மை பொருந்திய, நற்புகழையுடைய, நான்கு மறைகளாகிய பழைய நூலினை அருள்செய்த முக்கண்களையுடைய பரமனது ஆலமுற்றம் என்னுமிடத்திலே, அழகுபெறுமாறு இயற்றப் பெற்ற பொய்கைகள் குழ்ந்துள்ள பொழிலின்கண்ணே, சிற்றிலிழைத்து விளையாடும் சிறுமியர்களது கையாற்செய்யப் பெற்ற மணற்பாவைகள் விளங்கும் துறையினிடத்தே சென்று தங்கும். அவ்விடத்ததாகிய - -

மகரக்கொடியினை உச்சியிற்கொண்ட வான்தோய் மதிலையும், சிகரம் தோன்றாத அளவுக்கு மிகவுயர்ந்த மாடங்களைக் கொண்ட நல்ல அரண்மனைகளையும் உடைய, புகாஅர் என்னும் நல்ல நாட்டினிடத்தே உள்ளதாகும்.

செல்லுதற்கு அருமையுடையதான காட்டினைக் கடந்து செல்லவும் துணிதலைச் செய்யமாட்டாய் ஆகிப், பின் நினைவிலேயே நிலைபெற்று மீண்டு செல்வதற்குக் கருதினை யானால் எனது நிலைமையினை அவளுக்குச் சென்று சொல்வாயாக

என்று, இடைச்சுரத்து ஒழியக் கருதிய நெஞ்சிற்குச் சொன்னான் தலைவன் என்க. -

சொற்பொருள்: 1. துன்னுதல் - அடைதல், துன்னருங்கானம் அடைதற்கு, அதாவது செல்லுதற்கு அரிய காட்டு வழி. துணிதல் - செல்லத் துணிவு கொள்ளல். 2. பின் நின்று - பின் நினைவிலே நிலைபெற்று, 3. ஒன்னார் - பகைவர். 4. iங்கு பெருந்தானை - பூரிப்பினையுடைய பெரிய சேனை. 5. உடைஇ - தோற்று வீழ்ந்து உருப்பு - வெப்பம்; புதையமறைய. ஒராங்கு - ஒரு பெற்றியே.9.வம்பப்புள்-புதிய பறவை.கம்பலை.ஆரவாரம். பெருந்தோடு - பெரிய தொகுதி. 10. தூர ஆடி - உயரத்தே வட்டமிட்டுப் பறந்து. 11. கனைவிசைக் கடுநீர் - மிக்க