பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/153

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


138 அகநானூறு - மணிமிடை பவளம்

அரியல் ஆர்கையர், விளைமகிழ் தூங்கச், செல்கதிர் மழுகிய உருவ ஞாயிற்றுச் 15

செக்கர் வானம் சென்ற பொழுதில், கற்பால் அருவியின் ஒலிக்கும் நாற்றேர்த் தார்மணி பலஉடன் இயம்பசீர்மிகு குருசில்! - நீ வந்துநின் றதுவே. சிறப்பு மிகுந்த தலைவனே! 20 வெண்மையான பிடவமரத்தின் இதழ்விரிந்த பூக்களின் மணம் வீசுகின்ற முல்லை நிலத்திலே, குறுகிய கிளைகளையும் குறுகிய முட்களையும் உடைய கள்ளியினது புன்மையான உச்சியினை மூடிப் படர்ந்திருக்கும் வளவிய கொடிமுல்லை யினது, ஆர்க்குக் கழன்ற புதிய பூக்களை ஊதி ஒதுக்கிவிட்டுத் தெளிந்த நீரினை, முறுக்குண்ட கொம்புகளையுடைய அழகிய கலைமான்கள் குடித்துவிட்டுப், புள்ளிகளையுடைய அழகிய தம் பிணைகளோடும் தங்கியிருக்கும் அவ்விடத்திலே,

களைக்கொட்டினை உடைய கையினர்களாகக், களைகளை வெட்டி எறியும் தொழிலையுடையவர்கள், கள்ளினை நிறையக் குடித்தவர்களாக, அதனாலாகிய களிப்பு மிகுதியாக வருவர். செல்லும் கதிரின் வெம்மை குறைந்த சிவந்த நிறத்தினையுடைய ஞாயிற்றுடன், செவ்வானம் பரவிய அக்காலத்திலே, மலையினின்று விழுகின்ற அருவியைப்போல, நல்ல தேரிலுள்ள மாலையாகிய மணிகள் பலவும் ஒன்றாகச் சேர்ந்து ஒலிக்க, வண்டினம் ஒலிக்கும் மலர்களையுடைய காடுகள் பிற்பட்டுப் போகும்படியாக, அருமையான தொழிலினைச் செய்துமுடித்த தலைமை மேவிய உள்ளத்துடனே, நீயும் இங்கு வந்து நின்றனை!

தெய்வத் தன்மை பொருந்திய கற்புடனே, நின் குடிக்கு விளக்கம் ஆகிய புதல்வனைப் பெற்ற, புகழ்மிகுந்த சிறப்பினை யுடைய நன்மையுடையவளான நின் மனைவிக்கே அல்லாமலும், நின் வருகை, எனக்கும் இனிய தருவதாகின்றது. நின் ஆயுள் சிறப்பதாக!

என்று, தலைமகன் வினை.வயிற் பிரிந்து வந்து எய்திய விடத்துத், தோழி புல்லுமகிழ்வு உரைத்தனள் என்க. -

சொற்பொருள்: விளக்கு - விளக்கம்; ஒளி தருவதும் ஆம். 5. அருந்தொழில் - செய்தற்கு அரியதான தொழில். செம்மல் உள்ளம் - செம்மாந்த உள்ளம். 6 இமிர்தல் - மொய்த்தல். 8.குண்டைக் கோட்ட - குட்டையான கிளைகளையுடையன. 10. ஆர் - ஆர்க்கு உயிர்ப்பின் மூச்சு விடுதலான 1. தெள்அறல் -