பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/155

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


140 அகநானூறு - மணிமிடை பவளம்

போயிருக்கும். ஆரவாரங்கொண்ட மறவரது வில்லினின்று எழும் அம்புகளின் வேகத்தால் அவை பிளந்துபடுவனவாயு மிருக்கும். பசுமை அற்றுப்போகக், காய்ந்த பருக்கைக் கற்கள் விளங்கும் அகன்ற இடத்தையுடைய, வேனிலின் வெம்மையி னாலே கொதித்திருக்கும் அத்தகைய காட்டினிடத்தே, மேகமும் பெய்யாது ஒழியும். அதனால், உயர்ந்த சிகரங்களில் அருவிகளும் இல்லையாகும். பெருவிழாவாகிய கார்த்திகை விளக்கீட்டிற்கு இடும் விளக்குகளைப்போல, இலைகளே இல்லாமல் பூக்களாகவே ஒருங்கே பல்கி மலர்ந்திருக்கும் இலவமரங்கள். உயர்ந்த நிலையினையுடைய, அத்தகைய பக்கமலைகளைக் கடந்து சென்றவர் நம் தலைவர்.

ஆராய்ந்தெடுத்த நல்ல அணிகளையும், நல்ல அழகினையும், மூங்கில் போன்ற பூரிப்பினையும் உடையன நமது தோள்கள். அவற்றின் ஒளிபொருந்திய வளைகள் நெகிழ்ந்து விழுமாறு அவையும் இப்போது மெலிவுற்றன. அத்துடன் நம்முடைய பெரிய அழகுகள் எல்லாம் கெடுமாறு பெரிய கையற்ற நெஞ்சமோடு நாம வருந்துகின்றோம். நம்மைக் கைவிட்டு, இரும்பினால் ஆகிய, அழிவற்ற இனிய உயிரினை உடையவர்போல நம்மைக் கருதும், வன்கண்மை உடைய வருமாயினர் அவர்.

என்று, பிரிவிடை வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொன்னாள் என்க.

சொற்பொருள்: 1. எல்வளை - ஒளிபொருந்திய வளை. 2. இருங்கவின் மிக்க. அழகு, 5. வலித்து-வலித்திருக்க 6. வெதிர் - மூங்கில் 8 கல்பொரு கற்கள் பொருகின்ற பொருந்தியும் ஆம் 11. பெருவிழா - கார்த்திகை விழா.

விளக்கம்: அவன் இவ்வாறு பிரிந்திருப்பின் நாம் இறந்து விடுவோம் என்பதையும் நினையாது, நம் உயிரை இரும்பினால் ஆனதுபோல எண்ணி, இப்படி வன்கண்மையுடன் இருக்கின்றான் போலும் என்கிறாள். அவள் ஆற்றாமையின் மிகுதியை உணர்த்துவது இது.

பாடபேதம்: வலித்து, வலிது.

186. பிறள்பால் இருக்கிறான்!

பாடியவர்: பரணர். திணை: மருதம். துறை: தலை மகளுக்குப் பாங்காயினார் கேட்ப, இல்லிடைக் பரத்தை சொல்லியது. சிறப்பு: காவிரிக் கரையிலுள்ள பழையன்