பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/161

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


146 . - அகநானூறு - மணிமிடை வளம்

என்று, பிரிவுணர்த்திய தோழிக்குத் ! சொன்னாள் என்க.

சொற்பொருள்: 1. புலம்பு - வருத்தம் துஞ்சி உடன் உறங்கி; கந்து உறவாடி, 2. கரந்துறை புணர்ச்சி - களவுக் கூட்டம், 3. சேய் நாடு தொலைவிலுள்ள நாடு. 4 வலித்த ஈட்டிக் கொணர்தற் கான. 5. கறுத்தோர் - சினந்தோர்; பகைவர். 6. தெம்முனை - போர்முனை, 8. பூந்தொட்ை விழா படைக்கலப் பயிற்சி பெற்ற இளையோரை அரங்கேற்றிக் கொற்றவைக்குச் செய்யும் விழா. 9. ஞெமிரிய - திமிர்ந்த, 9. திருநகர் - மாளிகை. 10. புலம்புறும் தனித்து அழகு கெடும். 10. சேண் ஓங்கு மிகவுயரமாக வளர்ந்த, 11. அலந்தலை - காய்ந்த உச்சி. 12. கல் - மலை. 12. பாக்கம் - குடியிருப்பு:13, ஏமத்து அல்கி - பாதுகாப்பான காட்டரண்களுட் சேர்ந்திருந்து. 14. அணல் தாடி, சிவப்பாகப் பிளவுபட்டுத் தொங்கும் தசை 15. யா - ஒருவகை மரம், 17. கெடுநாட்டார் - கெடுதலுற்ற நாட்டினர். 18. வெளிறு - குருத்து; வெண்மைபற்றி வந்தது. 19. இளங்கதிர் அமையம் - அதிகாலைவேளை. 2.பனித்துறை-அஞ்சுதலையுடைய கடற்றுறையுமாம்.22.வேட்டு - வேட்டம் 23. நயனில் பரதவர் - வாழ்விலே பலப்பல துன்பங்களை அநுபவித்தலால் இப்படிக் கூறப்பட்டனர். 23. அம்பி படகு,

விளக்கம்: நாமும் அவருட்ைய பிரிவின் காரண்மாக வருந்தித் துன்புற, அவரும் சுரத்திடைப் பலப்பல அல்லல்களுக்கு எல்லாம் ஆட்பட்டுத் தொலைநாட்டிற்குச் சென்றனர். பொருள் தேடி வருவதனால் வரும் உயர்வுக்காகவே இப்படிச் சென்றனர் போலும் என்றனள்.

பாடபேதங்கள்: 10. சேய்நாட்டு, 12. கலை சேர்பு இருந்த 16, வேனில் வைப்பிற் கானிலம் காய. 17. நெடு நாட்டாரிடை 19. விலங்கு கதிர் விளங்கு கதிர்,

188. வாழிய மழையே!

பாடியவர்: வீரை வெளியன் தித்தனார். திணை: குறிஞ்சி. துறை: இரவில் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.

(வேங்கை மலர்ந்தது; தினையும் விளைந்தது. தலைவியின் கூட்டத்தை விரும்பியவனாகத் தலைமகன் வந்து ஒருபுறத்தே காத்திருக்கின்றான். இனித் தாம் சந்திக்க இயலாத தன்மையை அவனுக்குக் குறிப்பாகப் புலப்படுத்தி, வரைந்து வேட்டு மணந்து கொள்ளச் செய்யத் தோழி இப்படிக் கூறுகின்றாள்) -