பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/163

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


148 அகநானூறு - மணிமிடை பவளம்

சொற்பொருள்: 1. கொண்மு - மேகம். 2. வளைஇ சுற்றி வளைத்து. 3. போர்ப்புஉறு - தோலால் போர்த்திருத்தல் பொருந்திய, 4. திறன் அறிதல் - ஆட்சிக் கூறுபாட்டினை அறிதலும் ஆம். 5. பெருஞ்செய் ஆடவர் - பெரிய செயலாற்றலுடைய வீரர். 6. கழித்தெறிவாள் - உறையினின்றும் உருவி வீசிப் போரிடும் வாள்.10. காண்தக இயலி - காண்பதற்குத் தகுதியுடையதாக அழகுடன் நடந்து.

விளக்கம்: களவிலே ஒழுகிவருகின்ற தலைமகன் வரைந்து கொள்ளலிலே மனம் கொள்ளாதவனாக, அவனை அதற்குத் தூண்டுவாள், மழையைச் சுட்டி உரைப்பதுபோலச் சொல்லுகின்றாள். மேகங்களின் ஆரவாரம் போல ஊரலரும் வீணே மிகுந்தது; வேங்கை பூக்க மணங்கொள்ளும் காலமும் வந்தது; தலைவியை இனி நீ களவிலே துய்த்தல் அரிது என்றனள். இதனால் வரைவு கடாவியதாகக் கொள்க.

மேற்கோள்: ‘சுட்டு’ என்னும் உள்ளுறைக்கு இச் செய்யுளைக் காட்டிக், “கொன்னே செய்தியோ அரவம் என்றதனால், பயனின்றி அலர் விளைத்தியோ எனவும் கூறி, ஏனற் புறமும் தருதியோ என்பதனால், வரைந்து கொள்வையோ எனவும் கூறித், தலைமகனை மழைமேல்வைத்துக் கூறலின் சுட்டாயிற்று. கொன்னே செய்தியோ என்றதனால், வழுவா யினும் வரைதல் வேட்கையாற் கூறினமையின் அமைந்தது. என, ‘உடனுறை உவமம் சுட்டு நகை சிறப்பென என்னுஞ் சூத்திர உரையில் நச்சினார்க்கினியர் கூறினர்.

பாடபேதங்கள்:1 பல் கிளைக் கொண்டு.1.தட்டை ஒச்சியும். 12. அந்தழை தைஇயும்.

189. ஊரும் இழந்ததே!

பாடியவர்: கயமனார். திணை: பாலை. துறை: மகட்போக்கிய செவிலி சொல்லியது.

(தலைமகள் தன் காதலுனுடன் உடன்போக்கிலே சென்று விட, அவள் சென்றதறிந்து வருந்துகின்றாள் செவிலித்தாய். மகள் செல்லவிருக்கும் பாலைவழியின் கடுமையின் நினைவும், அவளைப் பிரிந்து வாடியிருக்கும் தன் வருத்தமும் மிகுதியாக ‘அவளை இந்த ஊரே இழந்துவிட்டதே’ எனப் புலம்புகிறாள்.)

பசும்பழப் பலவின் கானம் வெம்பி, விசும்புகண் அழிய, வேனில் நீடிக், கயம்கண் அற்ற கல்லோங்கு வைப்பின்