பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/165

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


150 அகநானூறு - மணிமிடை பவளம்

சொற்பொருள்: 2. விசும்பு கண்ணழிதல் - மேகம் வானத்து இல்லாது போதல். 4. நாடுயிர் மடப்பிடி - நெட்டுயிர்ப்புடன் விளங்கும் இளைய பிடி யானை, 8. கவா அன் - துடைகள். 1. மாதிரம் - திசைகள். 1. துழைஇ துழாவித் தேடி 15 வீழ்வு விருப்பம்.

விளக்கம்: மள்ளர்கள், களிறுகள் நெட்டுயிர்ப்புவிடும் தம் பிடிகளை அணைத்துச் செல்வதுபோலத் தம்முடைய விறலியரை அணைத்துக்கொண்டும், களிறுகள் பலாப் பழத்தினை எடுத்துச் செல்வதுபோல முழவுகளைத் தாம் எடுத்துக் கொண்டும், வேற்றுநாட்டு விழாவிலே ஆடலை விரும்பிச் சென்று கொண்டிருப்பவர் என்க. ஊர் இழந்தது என்றது, தானன்றியும் ஆயமும் சுற்றமும் போன்ற பிறரும் அவள் பிரிவுக்கு வருந்துதலை உரைத்ததாம்.

190. அலையல் அன்னை

பாடியவர்: உலோச்சனார். திணை: நெய்தல். துறை: தோழி, செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது.

('கானற்சோலையிலே கண்டான் ஒருவனுடன் தன் மகள் களவு ஒழுக்கத்தே ஈடுபட்டிருக்கின்றனள் என, ஊரிலே எழுந்த அலர் உரையால், செவிலித்தாய் மகளைக் கடிந்து கொண்டனள். இற்செறிப்பு முதலிய செய்யவும் தொடங்கினள். அதனைக் கண்டதோழி, குறிப்பினாலே தன் தலைவியின் காதலை அவட்கு உரைத்து அறத்தோடு நிற்கின்றனள்.)

திரைஉழந்து அசைஇய நிரைவளை ஆயமொடு உப்பின் குப்பை ஏறி எற்பட, வருதிமில் எண்ணும் துறைவனொடு, ஊரே ஒருதன் கொடுமையின் அலர்பா டும்மே; அலமரல் மழைக்கண் அமர்ந்து நோக்காள் 5

அலையல்-வாழி! வேண்டு, அன்னை!-உயர்சிமைப் பொதும்பில், புன்னைச் சினைசேர்பு இருந்த வம்ப நாரை இரிய, ஒருநாள், பொங்குவரல் உதையொடு புணரி அலைப்பவும், உழைக்கடல் வழங்கலும் உரியன்; அதன்தலை 10 இருங்கழிப் புகாஅர் பொருந்தத் தாக்கி வயச்சுறா எறிந்தென; வலவன் அழிப்ப. எழிற்பயம் குன்றிய சிறை அழி தொழில்