பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/167

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


152 அகநானூறு - மணிமிடை பவளம்

சொற்பொருள்:1.அசைஇய-தளர்ச்சியுற்ற.2.குப்பை-மேடு, எற்பட - கதிர் மறைய, கருக்கில் வேளை. 4. ‘ஒரு தன் கொடுமையின் ஒப்பற்ற தன் கொடுமையின் காரணமாக, 5. அலமரல் - சுழல்தல். 6. சினை - கிளை. 8. இரிய - அஞ்சிப் பறந்துபோக, 9. ஊதை - வாடைக்காற்று. புணரி - அலை. 10. உழைக்கடல் - கடலோரத்தில் 12 வயச்சுறா - வலிமையுடைய சுறா. 13. எழில் - அழகு பயம் - செல்லலாகிய பயன். 17. மான்ற மயக்கமுடைத்தாகிய,

விளக்கம்: அவன் வந்தான், தங்கியிருந்தான் என்பதல்லாது. உப்புமேட்டிலேறி நின்று வருதிமில் எண்ணும் அவனோடு, திரை உழந்து தளர்ந்துவரும் எம்மையும் தொடர்புப்படுத்திப் பேசுதல் பொய்யென்றால், இவை யாவும் அவை நிகழ்ந்தன எனக் குறிப்பாற் புலப்படுத்தியதும் ஆகும். இதனால், தலைவி அவன்பாற் காதல் கொண்டனள் என்பதைச் செவிலி உணர்வாள்.

191. முடிந்தால் சொல்லுவாய்!

பாடியவர்: ஒரோடகத்துக் கந்தரத்தனார். திணை: பாலை. துறை: தலைமகன், தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியது.

(பொருளார்வம், தன் காதலியைப் பிரிந்து தொலைநாடு

செல்வதற்குத் தூண்டிற்று. உள்ளமோ, பிரிவினைத் தாளாது அவள் படும் வேதனையின் நினைவினைச் சுட்டிப் போக்கைத் தடுத்தது. இரண்டு அலைமோதும் நெஞ்சினனான அவன், தன் நெஞ்சுடன் இவ்வாறு கூறுகின்றான்.

அத்தப் பாதிரித் துய்த்தலைப் புதுவீ எரிஇதழ் அலரியொடு இடைபட விரைஇ, வண்தோட்டுத் தொடுத்த வண்படு கண்ணி, தோல்புதை சிரற்றுஅடிக், கோலுடை உமணர் ஊர்கண் டன்ன ஆரம் வாங்கி, 5

அருஞ்சுரம் இவர்ந்த அசைவுஇல் நோன்தாள் திருந்துபகட்டு இயம்பும் கொடுமணி, புரிந்துஅவர் மடிவிடு விளையொடு, கடிதுஎதிர் ஓடி, ஒமைஅம் பெருங்காட்டு வரூஉம் வம்பலர்க்கு ஏமம் செப்பும் என்றுழ் நீள்இடை, 1 O அரும்பொருள் நசைஇப், பிரிந்துஉறை வல்லி சென்று; வினை எண்ணுதி ஆயின், நன்று. உரைத்திசின் வாழி-என் நெஞ்சே!-"நிரைமுகை