பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/169

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


154 அகநானூறு - மணிமிடை பவளம்

சொற்பொருள்: 2. எரி - நெருப்பு; அதன் நிறமானது அலரியின் நிறத்துக்கு உவமையாகச் சொல்லப்பட்டது. 3, தோடு - தாழைப் பூவின் இதழ். 4. தோல் - செருப்பு. சிரற்றடி - ஒலிக்கும் அடி சிதறிய அடியும்: ஆம், 6 அசைவில் தளர்ச்சியில்லாத, 7. இயம்பும் - ஒலிக்கும்.10. என்றுாழ் - வெப்பம், 16 ஒலி - தழைத்த,

விளக்கம்: உமணர்கள் வரும் பேரொலி. இனிப் பயமில்லை என்ற ஒரு பாதுகாப்பைப் புதியவர்களுக்குத் தரும் என்பதன் மூலம், காட்டின் கடத்தற்கரிய தன்மையைக் கூறினான். பிரிவினை அவள்பாற் சொல்லி ஆற்றியிருக்கச் செய்யமுடியாத நிலைமையைக் கூறுவான், வலிய கூறவும் வல்லையோ?” என்றான்.

பாடபேதங்கள்: பாடியவர் பெயர்; உரோடகக் கவுணியன் சேந்தன். 3. வண்டோட்டு. 1. வவ்வி. 13. உரையினி,

192. விரைவில் மணப்பாய்!

பாடியவர்: பொதும்பில் கிழான் வெண்கண்ணனார். திணை: குறிஞ்சி. துறை: தோழி, தலைமகனைச் செறிப்பு அறிவுறீஇ இரவுக்குறி மறுத்து செறிப்பறிவுறீஇ வரைவு

கடாயது என்பதும் பாடம்.

(தலைவனும் தலைவியும் பகற்குறியிலே சந்தித்த தமது களவு உறவினைத் தினைமுற்றித் தலைவி புனங்காவல் நீங்கிய பின்னரும், இரவுக்குறியிலே ஈடுபடுதலின் மூலம் நீட்டித்துக் கொள்ள விரும்புகின்றனர். அதனை நெடுகவும் தொடரவிடாது, விரைவிலே அவர்களை மணவாழ்விலே ஈடுபடுத்த விரும்புகிறாள் தோழி. அவள் சொல்லியது இது)

மதிஇருப் பன்ன மாசுஅறு டைர்நுதல் பொன்நேர் வண்ணம் கொண்டன்று; அன்னோ! யாங்குஆ குவள்கொல் தானே? விளம்பின் எய்யா வரிவில் அன்ன பைந்தார்ச், - செவ்வாய்ச், சிறுகிளி சிதைய வாங்கி, - 5

பொறைமெலிந் திட்ட புன்புறப் பெருங்குரல் வளைசிறை வாரணம் கிளையொடு கவர, ஏனலும் இறங்குபொறை உயிர்த்தன; பானாள் வந்து அளிக்குவை எனினே மால்வரை மைபடு விடாகம் துழைஇ, ஒய்யென - 10

அருவிதந்த, அரவுஉமிழ், திருமணி பெருவரைச் சிறுகுடி மறுகுவிளக் குறுத்தலின்